ராகுல், பிரியங்கா வலுக்கட்டாயமாக அகற்றம் - டெல்லியில் நடந்தது என்ன? 15 புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி 'இந்தியா' கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத் தலைமையகத்தை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.
இந்த பேரணி நிதி ஆயோக் அலுவலகம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையம் இடையே வந்தபோது, டெல்லி காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பேரிகார்டுகளை அமைத்து அதைத் தடுத்து நிறுத்த முயன்றனர். காவல்துறை தடையை மீறி ராகுல் காந்தி, பேரிகார்டின் மீது ஏறி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
காவல்துறையினர் தொடர்ந்து வழிமறித்ததை அடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
ராகுல் காந்தியைத் தடுத்து வைத்த காவல்துறையினர் அவரை கிங்ஸ்வே கேம்ப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடந்த போராட்டத்தில் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது என்பதை விளக்கும் புகைப்படத்தொகுப்பு.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், X/Congress

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், X/INC

பட மூலாதாரம், ANI
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























