'உயிர் தப்பியது அதிசயம்' - எஃப்-15 சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இரானில் 48 மணி நேரத்தை அமெரிக்க விமானி எப்படி கழித்தார்?

இரான் மீது பறந்துகொண்டிருந்தபோது தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சேதமடைந்த பாராசூட்டுடன் தரையை நோக்கி "கட்டுப்பாடின்றி விழுந்ததாக'' அமெரிக்க விமானப்படை விமானி தெரிவித்துள்ளார். அவரை மீட்பதற்காக ஆபத்தான மீட்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
    • எழுதியவர், மேக்ஸ் மட்சா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரான் மீது பறந்துகொண்டிருந்தபோது தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சேதமடைந்த பாராசூட்டுடன் தரையை நோக்கி "கட்டுப்பாடின்றி விழுந்ததாக'' அமெரிக்க விமானப்படை விமானி தெரிவித்துள்ளார். அவரை மீட்பதற்காக ஆபத்தான மீட்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

"ஒரு கட்டத்தில் மேலே பார்த்தபோது பாராசூட் தெரியவில்லை. நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் பயங்கரமான விஷயம் அதுதான்," என்று சிபிஎஸ் நியூஸ் நிறுவனத்தின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அந்த விமானி தெரிவித்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, ஏப்ரல் மாதம் இரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட விமானிகளில் ஒருவர் தனது அனுபவம் குறித்து முதன்முறையாகப் பேசியது ஆகும்.

சேதமடைந்த விமானத்தில் இருந்து இரண்டு அமெரிக்க வீரர்கள் வெளியேறினர். அவர்கள் இருவரும் தனித்தனியாகப் பிரிந்தனர். அமெரிக்க சிறப்புப் படையினர் தங்களை மீட்பதற்காக வரும் வரை, இரான் படைகளிடம் சிக்காமல் அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது.

"நான் கட்டுப்பாடின்றி விழுந்தேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்," என்று சிபிஎஸ் நிகழ்ச்சியில் 'பிராவோ' என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்ட அந்த அமெரிக்க விமானப்படை வீரர் கூறினார்.

"நான் எந்த வேகத்தில் கீழே விழுந்துகொண்டிருக்கிறேன் என்பதில் கவனம் செலுத்தவில்லை. அதற்குப் பதிலாக, எனக்கு முன்னால் இருந்த பிரச்னைகளைச் சரிசெய்யவும், பாராசூட்டை விரிக்க அல்லது அதன் சிக்கியிருந்த பகுதிகளை இழுத்து விடுவிக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் கவனம் செலுத்தினேன்," என்று அவர் கூறினார்.

தான் உயிர் பிழைத்ததை "ஓர் அதிசயம்" என்று அவர் குறிப்பிட்டார். எனினும், இந்தச் சம்பவத்தில் அவரது முதுகெலும்பு, தோள்பட்டை மற்றும் கை ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டது. அவர் தரையில் மோதியபோது அவரது வேகம் மணிக்கு 70 முதல் 100 மைல்கள் (மணிக்கு 113 முதல் 161 கி.மீ.) வரை இருந்ததாக அவர் கூறினார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த மற்றொரு அமெரிக்க விமானப்படை வீரர் 'ஆல்ஃபா' என்று அடையாளப்படுத்தப்பட்டார். அவர் சிபிஎஸ் நிறுவனத்துக்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.

3 கோடி டாலர் விமானம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சுமார் 3 கோடி டாலர் மதிப்புள்ள இரு இருக்கைகள் கொண்ட எஃப்-15இ ரக போர் விமானம், தோளில் சுமந்து ஏவக்கூடிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த ஏவுகணையின் விலை சுமார் ஒரு லட்சம் டாலர் என பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

காயமடைந்திருந்த போதிலும், இரான் படைகளிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்துடன், பிராவோ நீண்ட தூரம் நடந்து சென்று உயரமான மலை முகட்டின் உச்சியை அடைந்தார்.

அந்த சூழ்நிலையில் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக்கொள்ள, "தைரியத்தை இழக்காதே; இல்லையெனில் நீ இரான் தொலைக்காட்சியில் காணப்படுவாய்," என்று தன்னிடமே கூறிக் கொண்டதாக தெரிவித்தார்.

ஆல்ஃபா ஆறு மணி நேரத்துக்குள் மீட்கப்பட்டார். அந்த மீட்பு நடவடிக்கையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.

"உள்ளே செல்லும்போதும் வெளியே வரும்போதும் முழுவதும் துப்பாக்கிச் சண்டைதான் நடைபெற்றது. ஆனால், அவர்கள் ஆல்ஃபாவை மீட்டு அழைத்து வந்துவிட்டனர்," என்று ஹெக்செத் கூறினார்.

இரான் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் 48 மணி நேரத்துக்குப் பிறகு பிராவோ மீட்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் இரானுக்குள் 90-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் தரையில் இருந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையின் அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்தார். 46 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் இரானுக்குள் செயல்பட்டது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், வீரர்களை வெளியேற்றுவதற்குத் தேவைப்பட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பாலைவன மணலில் சிக்கிக்கொண்டன. சிறப்புப் படையினர் மாற்று மீட்புக் குழுவுக்காகக் காத்திருந்தநிலையில், அவற்றை அங்கேயே அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரான் மீது பறந்துகொண்டிருந்தபோது தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சேதமடைந்த பாராசூட்டுடன் தரையை நோக்கி "கட்டுப்பாடின்றி விழுந்ததாக'' அமெரிக்க விமானப்படை விமானி தெரிவித்துள்ளார். அவரை மீட்பதற்காக ஆபத்தான மீட்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எஃப்-15 போர் விமானம் (கோப்புப்படம்)

அழிக்கப்பட்ட அமெரிக்க விமானங்களில் இரண்டு, தலா சுமார் 10 கோடி டாலர் மதிப்புடையவை என்று சிபிஎஸ் தெரிவித்துள்ளது. மேலும், "லிட்டில் பேர்ட்" ரக ஹெலிகாப்டர்கள் பலவற்றையும் அழிக்க வேண்டியிருந்தது. அவற்றில் இருந்த தொழில்நுட்பங்கள் இரான் வசம் சென்றுவிடாமல் இருப்பதற்காக அவை அழிக்கப்பட்டதாக சிபிஎஸ் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுக்கு எதிராகத் தொடங்கிய போரில் சுமார் ஐந்து வாரங்கள் கடந்த நிலையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஏழாவது மாதத்தை எட்டியுள்ள இந்தப் போர், அமெரிக்காவில் நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கவுள்ள நிலையில், அந்நாட்டு மக்களிடையே பெருகிவரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்ததும், அதன் தொடர்ச்சியாகப் பிற பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட தாக்கமும் இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் நாள் வரை இந்தப் போர் குறைந்தபட்சம் தொடரும் என்று கணித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு