'பாட்டி இறந்த செய்தி, பேச அனுமதி மறுப்பு' – டெல்லி காவல்துறை குற்றச்சாட்டுக்கு அபிஜித் திப்கே பதில்

இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்.எஃப்.ஐ) சேர்ந்தவர்கள் ஜந்தர் மந்தரை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினர் அவர்களைக் காவலில் எடுத்ததாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

பெற்றோருடன் பேசுவதற்கு தான் மறுத்துவிட்டதாக டெல்லி காவல்துறை முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அபிஜித் திப்கே பதிலளித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே, தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் பதிலளித்துள்ளார்.

"எனது பாட்டியுடன் வசிக்கும் உறவினரிடம் பேச அனுமதிக்குமாறு கேட்டேன். குறைந்தபட்சம் அந்த உறவினரின் தொலைபேசி எண்ணையாவது பெறுவதற்காக, சில நிமிடங்கள் எனது கைப்பேசியைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரினேன். டெல்லி காவல்துறை ஏன் தொலைபேசியைப் பயன்படுத்தி பேச அனுமதிக்கவில்லை? எனது வழக்கறிஞரிடம் பேசவும் அனுமதி கேட்டேன். அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை 3.30 மணிக்கு தனது தந்தையை அழைத்துப் பேசுமாறு காவல்துறையினர் கூறியதாகவும் திப்கே தெரிவித்துள்ளார்.

"நீண்ட காலத்துக்கு நான் சிறையில் அடைக்கப்படுவேன் என்று எனது தந்தையிடம் தெரிவிக்குமாறு டெல்லி காவல்துறையினர் கூறினர்," என்று அவர் எழுதியுள்ளார்.

மேலும், "தனது தாயை இப்போதுதான் இழந்த தந்தை அவர். எனது பாட்டியின் மரணத்துக்குப் பிறகு, எனது குடும்பத்தினருக்கு இன்னும் எவ்வளவு மனவேதனையை ஏற்படுத்த விரும்பினீர்கள்? அதிகாலை 3.30 மணிக்கு எனது பெற்றோரை அழைக்க முயன்றதன் நோக்கம் என்ன? அவர்களை மேலும் வருத்தப்படச் செய்ய விரும்பினீர்களா?" என்றும் திப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

திப்கே

'திப்கேயிடம் பாட்டி இறந்த தகவலைத் தெரிவித்தோம்' - டெல்லி காவல்துறை

அக்டோபர் 10-ஆம் தேதி விமானத்துக்குள் இருந்து அபிஜித் திப்கே காவலில் எடுக்கப்பட்ட விவகாரத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள டெல்லி காவல்துறை, ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பு நடத்தி தனது தரப்பு விளக்கத்தை அளித்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டெல்லி காவல்துறையின் ஷாதரா துணை ஆணையர் நேஹா யாதவ் இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

திப்கே மற்றும் அவருடன் இருந்த இருவரை காவலில் எடுத்தது குறித்துப் பேசிய அவர், அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவலில் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

திப்கேயின் பாட்டி உயிரிழந்த செய்தி காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்ததும், அவர்கள் அவரிடம் சென்று தகவலைத் தெரிவித்ததாகவும், அவரை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய முன்வந்ததாகவும் கூறி, பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றை துணை ஆணையர் வெளியிட்டார்.

ஆனால், விமானத்தில் செல்ல திப்கே மறுத்துவிட்டதாக நேஹா யாதவ் தெரிவித்தார். தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அவருக்கு காவல்துறை அவகாசம் அளித்ததாகவும், இருப்பினும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

திப்கே தனது பெற்றோருடன் பேசுவதற்கும் டெல்லி காவல்துறை வாய்ப்பு வழங்கியதாகவும், ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

காக்ரோச் ஜனதா கட்சி காவல்துறையை எதிர்மறையாகச் சித்தரித்ததாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியது. முந்தைய போராட்டங்களின்போதும் திப்கே சட்டத்தை மீறியதாகவும், இந்த முறையும் சிஜேபி சட்டத்தை மீறியதாகவும் காவல்துறை தெரிவித்தது. திப்கேவுக்கு இந்த முறை போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், டெல்லி மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தது.

டெல்லி காவல்துறை வெளியிட்ட காணொளியில் என்ன உள்ளது?

டெல்லி காவல்துறை வெளியிட்ட காணொளியில், அபிஜித் திப்கேவைப் போன்ற தோற்றமுடைய ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது, இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகள் அவரது பாட்டி உயிரிழந்த செய்தியை அவரிடம் தெரிவிப்பதைக் காண முடிகிறது.

பின்னர், சாதாரண உடையில் இருக்கும் ஒருவர் அவரை விமானத்தில் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறார். அதற்கு அந்த நபர், "நான் இங்கேயே இருப்பேன்" என்று பதிலளிக்கிறார்.

இந்தக் காணொளியின் நம்பகத்தன்மையைச் சுயமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து காக்ரோச் ஜனதா கட்சி இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்.எஃப்.ஐ) சேர்ந்தவர்கள் ஜந்தர் மந்தரை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினர் அவர்களைக் காவலில் எடுத்ததாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, ஜான் பிரிட்டாஸ்

எஸ்.எஃப்.ஐ போராட்டம்

இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்.எஃப்.ஐ) சேர்ந்தவர்கள் ஜந்தர் மந்தரை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினர் அவர்களைக் காவலில் எடுத்ததாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

எஸ்.எஃப்.ஐ-யின் அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி மற்றும் பிற உறுப்பினர்களைக் காவல்துறையினர் காவலில் வைத்திருப்பதாகக் கூறி, அந்த அமைப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தக் காணொளியில், ஆதர்ஷ் எம். சாஜியும் சிலர் வாகனம் ஒன்றுக்குள் இருப்பதைக் காண முடிகிறது.

அந்த அமைப்பைச் சேர்ந்த சூரஜ் எலமோன், அபிஜித் மணிலால் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொண்டர்களை காவல்துறையினர் காவலில் எடுத்ததாக எஸ்.எஃப்.ஐ தெரிவித்துள்ளது.

மேலும், காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்தியதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டைச் சுயமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

காவலில் எடுக்கப்பட்ட பலர் எங்குள்ளன என்பது தெரியாத தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் எஸ்.எஃப்.ஐ தெரிவித்துள்ளது.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மீது டெல்லி காவல்துறை தாக்குதல் நடத்தியதாகப் புகார்

எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக புகார்

போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மீது டெல்லி காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காயமடைந்த நிலையில், அவர் சாலையோரத்தில் விடப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் ஆகியோர் சந்தித்தனர்.

காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதும் மீண்டும் போராட்டத்தில் இறங்கிய நேஹா போரா

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மீண்டும் போராட்டத்தில் இறங்கிய நேஹா போரா – என்ன நடந்தது?
படக்குறிப்பு, நேஹா போரா

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் நேஹா போரா, ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுடன் டெல்லி ராமகிருஷ்ண ஆசிரம் மார்க் பகுதிக்கு வந்தார்.

அங்கு இருந்த பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ், நேஹா போராவை காவல்துறையினர் காவலில் அழைத்துச் சென்றதை உறுதிப்படுத்தினார்.

எனினும், அவரால் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை. நேஹா போரா தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், மற்றவர்களுடன் அவர் ஓடிச் செல்வதைக் காண முடிகிறது.

அக்டோபர் 2-ஆம் தேதி முதல் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் நேஹா போரா முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார். கிட்டத்தட்ட ஒவ்வொரு போராட்டத்தின்போதும் அவர் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை, டெல்லி ஜந்தர் மந்தருக்குச் செல்லும் சாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், அவர் திடீரென டெல்லி ஹாட் பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தனது போராட்ட உத்தியை மாற்றிய நேஹா போரா, போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தை அறிவித்து, ஆதரவாளர்கள் அங்கு வருமாறு அழைப்பு விடுத்து மற்றொரு காணொளியை வெளியிட்டார். இதையடுத்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போதும் காவல்துறையினர் அவரை அழைத்து சென்றனர்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

மோதியை விமர்சித்த காக்ரோச் ஜனதா கட்சி

காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, பிரதமர் நரேந்திர மோதியை நேரடியாக விமர்சித்தனர்.

அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ், ரத்னா சிங் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பேசினர். கட்சித் தலைவர் அபிஜித் தீப்கேவின் பாட்டி உயிரிழந்ததால், அவர் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். இதனால், அவர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அசுதோஷ் ரங்கா, "இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோழைத்தனமான பிரதமர் நரேந்திர மோதிதான்" என்று விமர்சித்தார்.

சௌரவ் தாஸ் கூறுகையில், "நீரவ் மோதி, விஜய் மல்லையா ஆகியோரை விமானத்தில் ஏற்றி நாட்டை விட்டு வெளியேற இந்த அரசாங்கம் அனுமதித்தது. ஆனால், எங்களை விமானத்திலிருந்து இறக்கிவிட்டார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

சனிக்கிழமை தாங்கள் காவலில் வைக்கப்பட்டதற்கு மத்திய அரசே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

"எங்களைக் கடத்திச் சென்றபோது எந்த ஆவண நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் வருவதுபோல காவல்துறையினர் வந்து எங்களை அழைத்துச் சென்றனர். எங்களது கைப்பேசிகளையும் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டனர். பெண் காவலர்கள் எங்களது கைப்பேசிகளை எடுத்துச் சென்றனர். ஆனால், எந்தச் சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை," என்று அவர் கூறினார்.

மேலும், "என்னை ஆர்.கே. புரத்தில் வைத்திருந்தனர். அசுதோஷை பல்லப்கருக்கு அழைத்துச் சென்றனர். அபிஜித்தையும் வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். எங்களை அழைத்துச் சென்றபோது, வழக்கறிஞரிடம் பேசுவது எங்களது அடிப்படை உரிமை என்று கூறினோம். ஆனால், காவலில் இருக்கும்போது எந்த உரிமையும் கிடையாது என்று எங்களிடம் தெரிவித்தனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை எந்த அளவுக்கு வன்முறையைப் பயன்படுத்தியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்," என்றார் சௌரவ் தாஸ்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்களது கைப்பேசிகளில் என்ன செய்திருப்பார்களோ என்று இப்போது கவலைப்படுகிறோம். எங்களது கைப்பேசிகள் குளோன் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். நாளை எங்களது கைப்பேசிகள் குளோன் செய்யப்பட்டு, அவை ஆதாரங்களாக முன்வைக்கப்படலாம்," என்று கூறினார்.

முன்னதாக காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரும் தலைவருமான அபிஜித் திப்கே தனது முதல் எதிர்வினையை வெளியிட்டுள்ளார்.

அபிஜித் திப்கே, பிரதமர் மோதியை கடுமையாக விமர்சித்து, அவரை "கோழை" என்று குறிப்பிட்டார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமராக இருக்கும் மோதி, இந்தியாவுக்கே அவமானம். அவரைப் போல் இவ்வளவு கோழைத் தனமும் அச்சுறுத்தும் மனப்பான்மையும் கொண்ட ஒருவரை இந்த நாடு இதுவரை பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.

 காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, பிரதமர் நரேந்திர மோதியை நேரடியாக விமர்சித்தனர்.

காவலில் 23 மணிநேரம் வைக்கப்பட்டிருந்த அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரும் டெல்லி கன்டோன்மன்ட் பகுதியில் உள்ள நிர்வாக மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாட்டி உயிரிழந்தது குறித்துப் பேசியுள்ள அபிஜித் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தத் துயரமான நேரத்தில் என் குடும்பத்தினருடன் இருக்க நான் என் சொந்த கிராமத்திற்குச் செல்கிறேன். சௌரவ், அஷுதோஷ் விரைவில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள்" எனத் தெரிவித்தார்.

அத்துடன், "சிஜேபி பின்வாங்கப் போவதில்லை, அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது. இந்த சர்வாதிகார ஆட்சியின் முடிவின் தொடக்கமாக அக்டோபர் 10 நினைவுகூரப்படும்" எனவும் கூறியுள்ளார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

மெட்ரோ ரயில், இணைய சேவையை முடக்கக் கூடாது : உச்சநீதிமன்றம்

டெல்லியில் சிஜேபி (CJP) போராட்டத்தையொட்டி மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளுக்கு முழுமையான தடை விதிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு மீறப்பட்டதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவின் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11, 2026) நோட்டீஸ் பிறப்பித்தது. அதேவேளையில், அமைதியான முறையில் கூடும் மக்களை சட்டவிரோதமாகக் காவலில் வைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு அமர்வாக கூடிய நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா அமர்வு, சட்டம்-ஒழுங்கு சூழ்நிலைகளுக்கு உட்பட்டு, டெல்லி மெட்ரோ தனது வழக்கமான அட்டவணைப்படி இயங்குவதை உறுதி செய்யுமாறும், இணைய சேவைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாததை உறுதி செய்யுமாறும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டுக் கொண்டது.

இந்திய தலைமை நீதிபதியை சந்திக்கவுள்ள காங்கிரஸ் தலைவர்

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களின் மத்தியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தாம் திங்கள்கிழமை இந்திய தலைமை நீதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசை விமர்சித்த மல்லிகார்ஜுன் கார்கே, அரசு தங்களைப் பார்த்து அச்சப்படுவதால்தான் மக்களைக் கைது செய்ய உத்தரவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, "எங்களுடைய அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நேற்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசரநிலை காலத்தில்கூட ரயில்களையும் விமானங்களையும் நிறுத்தியதில்லை. காரணமின்றி யாரையும் கைது செய்ததில்லை," என்றார்.

மேலும், "போராட்டங்களைத் தடுக்கவே மக்களைக் கைது செய்ய மோதி அரசு உத்தரவிட்டது. அவர்கள் விமானத்தில் பயணித்தவர்களாக இருந்தாலும், ரயிலில் பயணித்தவர்களாக இருந்தாலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது இளைஞர்களைக் கண்டு அரசு அஞ்சுகிறது என்பதையே காட்டுகிறது. எங்களுடைய உரிமைகளுக்காகவும், குடிமக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்," என்று கூறினார்.

அவர் மேலும், "நாளை தலைமை நீதிபதியைச் சந்திக்க இருக்கிறோம். ராகுல் காந்தியும் நானும் இணைந்து கடிதம் எழுதி, சந்திப்பதற்கான நேரத்தைக் கோரியுள்ளோம்," என்றார்.

இதற்கிடையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமையே பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

'படுக்கையறைக்குள் புகுந்து கடத்தினார்கள்' - துருவ் ரத்தீ

பிரபல யூட்யூபர் துருவ் ரத்தீ, தன்னை காவல்துறையினர் "கடத்திச் சென்றதாகவும்", அதனால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

துருவ் ரத்தீ, தாம் இந்திய குடிமகன் என்பதையும் தனது பாஸ்போர்ட்டை காட்டி விளக்கம் அளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில் துருவ் ரதீ கூறியதாவது, "இது என்னுடைய பாஸ்போர்ட். நான் ஒரு இந்திய குடிமகன். நான் என்றும் இந்தியனாகவே இருப்பேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பதால் போராட்டத்தில் பங்கேற்க முடியாது என்று கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. நான் ஒரு இந்திய குடிமகன். சாதாரண குடிமகனுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் எனக்கும் உள்ளன."

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

மேலும் அவர், "அக்டோபர் 10ஆம் தேதி காலை சுமார் 7 மணியளவில் நான் என் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். வீட்டின் வெளியே நிறைய பேர் சுற்றித் திரிந்ததால், என் தாய் கதவைத் திறந்தார். அவர்கள் காவல்துறையினர் அல்ல; சாதாரண உடையில் இருந்தனர். அவர்கள் திடீரென உள்ளே நுழைந்து வீட்டிற்குள் என் படுக்கையறைக்கு வந்து என்னைக் கடத்திச் சென்றனர். இதை நான் 'கடத்தல்' என்று கூறுகிறேன். ஏனெனில் இது கைது அல்லது தடுப்புக் காவல் அல்ல. நான் போராட்டத்திற்குச் சென்றிருந்தால் அது தடுப்புக் காவலாக இருக்கலாம். ஒரு காவலர் சீருடையில் வந்து தனது அடையாளத்தைக் காட்டி என்னைக் கைது செய்திருந்தால் அது கைது என்று கூறலாம்" என்றார்.

போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அபிஜித் திப்கே கூறியது என்ன?

மேலும், "நான் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, அங்கே 50க்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் காவல்துறையினரா அல்லது வேறு ஏதாவது அமைப்பைச் சேர்ந்தவர்களா என்று தெரியவில்லை. அவர்கள் என்னை குற்றவாளியைப் போல் இழுத்துச் சென்றனர். இதனால் எனக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. என்னை ஒரு ஜீப்பில் ஏற்றி முதலில் ஒரு காவல் நிலையத்திற்கும், பின்னர் இன்னொரு காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்றனர். இதற்கான எந்தக் காணொளியும் இல்லை, ஏனெனில் அவர்கள் என் கைப்பேசியைப் பறித்துக் கொண்டனர். எனக்கு வழக்கறிஞரைச் சந்திக்கவோ, தொலைபேசியைப் பயன்படுத்தவோகூட அனுமதி அளிக்கவில்லை. சுமார் 22 முதல் 23 மணிநேரம் அங்கேயே அமர வைத்திருந்தனர்" என்றும் விவரித்தார்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

அத்துடன், "எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? எந்தச் சட்டத்தையும் மீறாத ஒரு சாதாரண குடிமகன், உண்மைக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்ததால், சிறந்த தேர்தல் ஆணையத்தைக் கோரியதால், அவரது படுக்கையறையில் இருந்து இழுத்துச் செல்லப்படுகிறார். அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கடத்துகின்றனர். அவரது பெற்றோர் தாக்கப்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படுத்துகின்றனர்."

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

"இது எந்த ஜனநாயக நாட்டிலும் நடக்காது. நரேந்திர மோதி இந்த நாட்டை சர்வாதிகார ஆட்சியாக மாற்றியுள்ளார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத அவசரநிலையைப் போன்றது. சிஜேபி தலைவர்கள் உள்பட 7,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் அவசர நிலைக் காலங்களிலும் வட கொரியா போன்ற நாடுகளிலும் நடக்கும். தற்போது அவை நம் நாட்டிலும் நடக்கின்றன."

தன்னை கண்காணிப்பதற்காக குறைந்தது 15 பேரையாவது தன்னைச் சுற்றி வைத்திருப்பதாகவும், அவர்கள் தன்னை அறிவிக்கப்படாத வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

"நரேந்திர மோதிக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். யாரையும் இவ்வளவு பயமுறுத்த வேண்டாம்; ஒருகட்டத்தில் அனைத்து பயமும் மறைந்துவிடும். சோனம் வாங்சுக்ஜிக்கு நன்றி. அவர் உண்ணாவிரத போராட்டம் மூலம் அரசுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார்" எனத் தெரிவித்தார் துருவ் ரத்தீ. குருகிராமில் இருந்து தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட துருவ் ரத்தீ, சில மணிநேரம் கழித்து காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை

ஐ.நா-வின் கருத்துக்கு இந்திய அரசின் எதிர்வினை

'காக்ரோச் ஜனதா கட்சி' நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட பெரிய அளவிலான நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள இந்தியா, அந்தக் கவலைகள் அடிப்படையற்றவை என்று கூறியுள்ளது.

ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையை இந்திய அரசமைப்பு உறுதி செய்துள்ளது. வலுவான நிறுவனங்கள், சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான ஊடகங்கள் மூலம் இந்த உரிமை பாதுகாக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை காவலில் எடுக்கும் காவல்துறை - என்ன நடக்கிறது? நேரலை
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் இப்போதைய கோரிக்கை என்ன?

டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியிலுள்ள இன்னர் சர்கிளில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை காவல்துறையினர் காவலில் எடுத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை கானாட் பிளேஸில் இருந்து காவலில் எடுக்கப்பட்டவர்களில், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) மற்றும் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF) ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய மாணவர்களும் அடங்குவர்.

எஸ்ஐஆர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
படக்குறிப்பு, மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் (கோப்புக் காட்சிகள்)

காக்ரோச் ஜனதா கட்சி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிஜேபி உறுப்பினரான அஜிங்க்யா ஷிண்டே, போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஜந்தர் மந்தருக்கு செல்வதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர் நேஹா போராவும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை அறிவித்தார். போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, டெல்லி: போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே

"ஒவ்வொரு ஜனநாயக நாட்டையும் போலவே, இந்தியாவிலும் பொது ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் விதிக்கப்படும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் இந்த உரிமையைப் பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு குறை தொடர்பாகவும் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"எனவே, மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ள கவலைகள் தேவையற்றவை. அவை இந்தியாவின் உள்விவகாரங்களில் செய்யப்படும் தேவையற்ற தலையீடு. மனித உரிமைகள் அமைப்பு பாரபட்சமின்றிச் செயல்பட வேண்டிய தனது பொறுப்புக்கு ஏற்ப, பிற இடங்களில் நடக்கும் பெரிய அளவிலான போராட்டங்கள் குறித்தும் சமமான கவனம் செலுத்த வேண்டும்" என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, விமானத்தில் வைத்தே காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே

முன்னதாக, டெல்லியில் போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், குடிமைச் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்திருந்தது.

மேலும், தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருந்தது.

அபிஜித் திப்கே
படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். சனிக்கிழமை அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மோதி–ஷா எந்த அளவுக்குப் பயந்துபோயுள்ளனர் என்றால், இன்று அவர்கள் குழந்தைகளைக் கூடக் கடத்துகிறார்கள். இதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி சிஜேபி போராட்டம்

அபிஜித் திப்கே உள்பட சிஜேபி தலைவர்கள் மூவரும் விடுவிப்பு

முன்னதாக, நேற்று (அக்டோபர் 10) காலை மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா விமானத்தில் இருந்து இறங்குவதற்கும் முன்பாகவே உள்ளே வைத்தேதே காவல்துறையால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டனர்.

காவல் துறையின் காவலில் 23 மணிநேரம் வைக்கப்பட்டிருந்த அவர்கள் இன்று நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். லைவ் லா வெளியிட்ட தகவலின்படி, சிஜேபி-யின் இந்த மூன்று முக்கியத் தலைவர்களும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு