'கட்டட இடிபாடுகளுக்கு உள்ளே கூக்குரல்': வெனிசுவேலா நிலநடுக்கத்தின் கோரத்தை உணர்த்தும் புகைப்படங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த 2 நிலநடுக்கங்களில் குறைந்தது 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் தீவிரமாக உள்ளனர்.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குறைந்தது 4,300 பேர் காயமடைந்துள்ளனர்.

கராகஸ் மற்றும் லா குவைராவில், இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மக்கள் உதவிக்காகக் கூக்குரலிடும் சத்தம் கேட்டு, அங்கே மீட்புக்குழுக்கள் விரைகின்றன.

நிலநடுக்க பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தும் புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு