You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'நமாஸின் நன்மைகளை' கூறியதற்காக கேலி செய்யப்பட்ட பெண் தொழிலதிபர் - இவரது பின்னணி என்ன?
நமிதா தாப்பர் நன்கு அறியப்பட்ட பெண் தொழிலதிபராகவும் , சமூக வலைத்தள பிரபலமாகவும் உள்ளார்.
இரானுடன் போர் நிறுத்தம் நீட்டிப்பு - டிரம்புக்கு நன்றி கூறிய பாகிஸ்தான்
இரானுடனான போர் நிறுத்தத்தை பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்கா நீட்டிக்கும் என கூறியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானிய துறைமுகங்களில் முற்றுகை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆட்டு ஈரல் சாப்பிடுவதால், உங்களின் கல்லீரல் பாதிப்புகள் சரியாகுமா? - மருத்துவர்களின் விளக்கம்
கோழி அல்லது ஆட்டின் ஈரல் சாப்பிடுவது மனிதர்களின் ஈரலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்குமா?
காணொளி, காணொளி: பூத் ஸ்லிப் என்பது என்ன? - வாக்களிக்க இந்த 12 ஆவணங்களில் 1 போதும், கால அளவு 1,32
வாக்காளர் அடையாள அட்டை தவிர 12 ஆவணங்களை வைத்தும் ஒருவரால் வாக்கு செலுத்த முடியும்.
வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? - 5 கேள்விகள் மற்றும் பதில்கள்
மாத்திரை சாப்பிடுவதென்பது மிகவும் எளிதான செயலாகத் தோன்றலாம். நாம் மாத்திரையை வாயில் போட்டு, சிறிது தண்ணீர் குடித்து, அதனுடன் வேலை முடிந்துவிட்டதாக உணர்கிறோம். ஆனால் உண்மையில் மாத்திரையை சரியான முறையில் உட்கொள்வது எப்படி?
அப்பல்லோ vs ஆர்டெமிஸ்: பூமி 58 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது?
கடந்த 1968ஆம் ஆண்டில், அப்பல்லோ 8 விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் புகழ்பெற்ற 'எர்த் ரைஸ் (பூமி உதயம்)' புகைப்படத்தை எடுத்தனர். இப்போது ஆர்டெமிஸ்-2 பயணத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள் 'எர்த்செத் (பூமி மறைவு)' என்ற புதிய புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
சிஎஸ்கே செய்த அதே தவறால் சறுக்கிய டெல்லி - பந்துவீச்சிலும் எழுச்சி காணும் ஹைதராபாத்
2024-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள், கடந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் என நேற்றைய போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிட்ச் ஹைதராபாத் அணி ரன்களை குவிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பிட்ச். எனவே, போட்டி தொடங்கும் முன்பே இந்த ஆட்டத்திலும் ரன் வேட்டை நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
காணொளி, 'இன்னும் மீள முடியவில்லை' - பஹல்காமில் பலியான ராணுவ வீரரின் தந்தை, கால அளவு 3,21
பஹல்காம் தாக்குதலில் பலியான லெப்டினன்ட் வினய் நர்வாலின் குடும்பத்தினர், அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
நேரலை, இரானுடன் போர் நிறுத்தம் நீட்டிப்பு - டிரம்ப் கூறியது என்ன?
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தத்தில் உலக வல்லரசுகளை விஞ்சியது எப்படி?
அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மோதலைத் தீர்க்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு குறைந்துள்ள நிலையில், தங்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான், எகிப்து, துருக்கி போன்ற நடுத்தர வலிமை கொண்ட நாடுகள் புதிய மற்றும் முக்கிய மத்தியஸ்தர்களாக உருவெடுத்துள்ளன.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தேர்தலில் வெற்றி - தோல்வியை முடிவு செய்யுமா?
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் கடந்த டிசம்பர் மாதம் அந்தப் பகுதியையே பதற்றத்திற்கு உள்ளாக்கியது. நான்கு மாதங்களே கழிந்திருக்கும் நிலையில், நடக்கும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த விவகாரம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்?
பொது கழிப்பறைகள் உள்ளே இருப்பவரின் கால் வெளியே தெரியும் வகையில் கட்டப்படுவது ஏன்?
கழிப்பறைகள் ஏன் கால்கள் தெரியும் வகையில் கட்டப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது, “இது இப்போது உருவான புதிய யோசனை அல்ல. இது அமெரிக்காவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அங்கிருந்து பல நாடுகள் இதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன” என்று கூறுகிறார் கட்டிடக் கலைஞர் கிரண்மயி.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்?
பாகிஸ்தானில் நடைபெற்ற இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடிவில்லாமல் போனதாகக் குறிப்பிடும் வான்ஸ், ஒப்பந்தம் ஏற்படாதது இரண்டு வாரகால போர்நிறுத்தத்தின் மீது என்ன தாக்கம் செலுத்தும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இரான் ஒரு ஏவுகணையை வைத்தே ஹோர்முஸ் வழி கப்பல் போக்குவரத்தை முடக்க முடியும் - எப்படி தெரியுமா?
இரான் அரசு கண்ணிவெடி ஆபத்து காரணமாக மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ள சூழலில், போர்நிறுத்தத்திற்குப் பின் ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து மிகக் குறைந்த அளவிலேயே தொடங்கியுள்ளது.
"குண்டு வீச்சால் தரை அதிர்ந்தது" - இரானிலிருந்து திரும்பிய தமிழக மீனவர்களின் அனுபவம் என்ன?
இந்திய தூதரகத்தின் மூலம் முதல் கட்டமாக இரானில் தவித்து வந்த 345 தமிழக மீனவர்களை மீட்டு சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்
இரான் போர் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அவற்றில், மூன்று முக்கிய தருணங்கள் தனித்து நிற்கின்றன. பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹொர்முஸ் நெருக்கடி அமையுமா?
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது.
குடகு: மலையேற்றத்தின் போது காணாமல் போன கேரள பெண் காட்டிற்குள் 4 நாள் உயிர் பிழைத்தது எப்படி?
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலையேற்றப் பாதையில் வழிதவறிய தொழில்நுட்ப வல்லுநர் சரண்யாவை, வனத்துறை அதிகாரிகள் நான்கு நாட்கள் கழித்து மீட்டுள்ளனர்.
நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி
நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பேசியபோது தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
விஜய் பரப்புரை மட்டும் அடுத்தடுத்து ரத்தாக என்ன காரணம்?
தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே பரப்புரை செய்துள்ள தவெக தலைவர் விஜய், 3 நாட்கள் தனது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.
பெண்கள், இளைஞர்களுக்கு குறி: தமிழக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எதை உணர்த்துகின்றன?
அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.
"சுனாமியை விட பெருஞ்சேதம்" - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
ஒரு காலத்தில் தனது பொருளாதார வளர்ச்சிக்காகவும், மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் உயர் மதிப்பீடுகளுக்காகவும் கொண்டாடப்பட்ட இந்த எழில்மிகு தெற்காசியத் தீவு, மீண்டும் ஒருமுறை மிக மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
லேசர் சிகிச்சை மூலம் கண்ணாடிக்கு 'குட்பை' சொல்ல நினைக்கிறீர்களா? 8 முக்கிய விஷயங்கள்
கடந்த சில ஆண்டுகளில் லேசிக் அறுவை சிகிச்சை மீதான மக்களின் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த கண் அறுவை சிகிச்சை உண்மையில் அனைவருக்கும் பாதுகாப்பான, பொருத்தமான தீர்வுதானா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குத் திரும்பியது: விண்கலம் 6 நிமிடம் தொடர்பை இழந்த போது என்ன நடந்தது?
மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். என்ன நடக்கிறது?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்