'கட்டட இடிபாடுகளுக்கு உள்ளே கூக்குரல்': வெனிசுவேலா நிலநடுக்கத்தின் கோரத்தை உணர்த்தும் புகைப்படங்கள்

நிலநடுக்கத்தால் சிதிலமடைந்த கட்டடங்களின் பின்னணியில், தனது உடைமைகளுடன் நடந்து செல்லும் பெண்
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் சிதிலமடைந்த கட்டடங்களின் பின்னணியில், தனது உடைமைகளுடன் நடந்து செல்லும் பெண்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த 2 நிலநடுக்கங்களில் குறைந்தது 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் தீவிரமாக உள்ளனர்.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குறைந்தது 4,300 பேர் காயமடைந்துள்ளனர்.

கராகஸ் மற்றும் லா குவைராவில், இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மக்கள் உதவிக்காகக் கூக்குரலிடும் சத்தம் கேட்டு, அங்கே மீட்புக்குழுக்கள் விரைகின்றன.

நிலநடுக்க பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தும் புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

வெனிசுவேலா தலைநகரான கராகஸின் கிழக்கு பகுதியில் சீட்டுக்கட்டு போல சரிந்து கிடக்கும் கட்டடம்
படக்குறிப்பு, வெனிசுவேலா தலைநகரான கராகஸின் கிழக்கு பகுதியில் சீட்டுக்கட்டு போல சரிந்து கிடக்கும் கட்டடம்
இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்புக்குழுவினருடன் இணைந்து மீட்கப் போராடும் பொதுமக்கள்
படக்குறிப்பு, இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்புக்குழுவினருடன் இணைந்து மீட்கப் போராடும் பொதுமக்கள்
 மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள சிவில் அதிகாரி ஒருவர் அமர்ந்திருக்கும் படம்
படக்குறிப்பு, மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள சிவில் அதிகாரி ஒருவர் அமர்ந்திருக்கும் படம்
கராகஸின் குடியிருப்பு பகுதி ஒன்றில் கட்டட இடிபாடுகளில் சிக்கியதால் சிதைந்து கிடக்கும் கார்
படக்குறிப்பு, கராகஸின் குடியிருப்பு பகுதி ஒன்றில் கட்டட இடிபாடுகளில் சிக்கியதால் சிதைந்து கிடக்கும் கார்
குடியிருப்புகள் சேதமடைந்ததால் சாலையோரம் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் மக்கள்
படக்குறிப்பு, குடியிருப்புகள் சேதமடைந்ததால் சாலையோரம் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் மக்கள்
சான் பெர்னார்டினோ பகுதியில் பாதி சிதிலமடைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் கட்டடம்
படக்குறிப்பு, சான் பெர்னார்டினோ பகுதியில் பாதி சிதிலமடைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் கட்டடம்
சேதமடைந்த கட்டடக்குவியலைப் பார்த்தவாறே கடந்து செல்லும் கராகஸ் நகரவாசி
படக்குறிப்பு, சேதமடைந்த கட்டடக்குவியலைப் பார்த்தவாறே கடந்து செல்லும் கராகஸ் நகரவாசி
தோய்ந்த நிலையில் இருக்கும் காலணி
படக்குறிப்பு, சேதமடைந்த கட்டடங்களுக்கு முன்பு ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த காலணி
நிலநடுக்கத்தால் விரிசல் விட்ட நிலையில் நிற்கும் கட்டடம்
படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் விரிசல் விழுந்த நிலையில் நிற்கும் கட்டடம்
இடிந்து கிடக்கும் கட்டடத்தின் நடுவே சிக்கியுள்ளவர்களை தேடும் மீட்புக்குழுவைச் சேர்ந்த ஒருவர்
படக்குறிப்பு, இடிந்து கிடக்கும் கட்டடத்தின் நடுவே சிக்கியுள்ளவர்களை தேடும் மீட்புக்குழுவைச் சேர்ந்த ஒருவர்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு