You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - சரித்திரம் படைத்தார் தீப்தி ஷர்மா
பிரிட்டனின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.
முதலில் பேட் செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் 17 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா சார்பில், ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்களையும் 9 பவுண்டரிகளையும் அடித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் 36 ரன்கள் எடுத்தார்.
தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம், ஸ்ரீ சரணி 4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம், தீப்தி ஷர்மா மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தீப்தி ஷர்மா ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டத்திற்குப் பின்னர் அவர் போது, "எனக்கு இது போன்ற ஆடுகளங்கள் பிடிக்கும். பந்து சற்று சுழன்றது, அதனால் நான் காற்றில் சற்று மெதுவாகப் பந்துவீசி, என் மீது நம்பிக்கை வைத்தேன். நான் சரியான இடங்களில் பந்துவீசினேன். எங்களுக்கு உத்வேகம் அளித்த ஸ்மிருதியின் ஆட்டத்திற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். விக்கெட்டுகள் கிடைக்காததைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் நான் நம்பிக்கையுடன் இருந்தேன், தேவைப்பட்டால் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று எனக்குத் தெரியும்." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு