யுக்ரேனில் ரயிலைத் தாக்கிய ரஷ்யா
யுக்ரேனில் ரயிலைத் தாக்கிய ரஷ்யா
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பயணித்துச் சென்ற சில நேரங்களுக்குப் பிறகு, யுக்ரேன்–போலந்து எல்லை அருகே சென்ற ரயிலை ரஷ்ய ட்ரோன் தாக்கியது.
கீவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை...
ஆனால் இதை ரஷ்யாவின் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக சிலர் பார்க்கின்றனர்.
அதே நாளின் தொடக்கத்தில், சில சரக்கு லாரிகள் தீவைக்கப்பட்டன...
அவை போலந்து எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்தன...
ரஷ்ய டிரோன் தாக்குதலுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்தது.
விரிவாக காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



