முதியவரின் முதுகில் ஏறி ஓடையை கடந்த அதிகாரி

காணொளிக் குறிப்பு, முதியவரின் முதுகில் ஏறி ஓடையை கடந்த வருவாய் அதிகாரி
முதியவரின் முதுகில் ஏறி ஓடையை கடந்த அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பிரதேசத்தில் கிராம வருவாய் அதிகாரி ஒருவர் 65 வயதுடைய முதியவரின் முதுகில் ஏறி ஓடையைக் கடக்கும் காட்சி இது.

கனமழையால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்வதற்காக வருவாய்த் துறையின் குழு கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக வருவாய் அதிகாரி நிலேஷ் நாம்தேவ் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார்.

ஆய்வின் போது, வழியில் மழைநீரால் நிரம்பிய ஓடை ஒன்றை கடப்பதற்காக லால்வா கேவட் என்ற முதியவரின் முதுகில் ஏறி ஓடையைக் கடந்தார்.

இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிதி மாவட்டத்தில் உள்ள மாதா கிராமப் பஞ்சாயத்தில் நடைபெற்றது.

இந்தச் சம்பவத்துக்கு எதிராக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்து நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

கோபத் பனாஸ் வட்டத்தின் துணை மாவட்ட ஆட்சியர் பிரியா பாதக், நிலேஷ் நாம்தேவை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

மேலும், அரசு நில ஒதுக்கீடு பட்டா, பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்ட நன்மைகள், மற்றும் சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றுத் தருவதற்காக இந்த வருவாய் அதிகாரி பணம் கேட்டதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு