இந்தியாவில் வேலை தேடும் ஒரு இளம் பட்டதாரியின் கதை
உலகிலேயே அதிக இளைஞர் மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 367 மில்லியன் இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர். இது நாட்டின் வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். இவர்களில் 263 மில்லியன் பேர் கல்வியில் இல்லை; இவர்கள் நாட்டின் சாத்தியமான தொழிலாளர் சக்தியாக உள்ளனர்.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அரசின் சமீபத்திய காலமுறை தொழிலாளர் சக்தி ஆய்வின்படி இந்த இளைஞர் குழுவினரிடையேயான வேலையின்மை விகிதம் 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 15.9% ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டான 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 15% விகிதத்துடன் ஒப்பிடுகையில் சற்றே அதிகமாகும்.
மேலும், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பட்டதாரி இளைஞர்களிடையே வேலையின்மை நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. 15 முதல் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 40% ஆகவும், 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே 20% ஆகவும் உள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் இளைஞர்களின் வாழ்க்கையில் உண்மையில் என்ன அர்த்தம் தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரியான அபி, நொய்டாவில் வேலை தேடும் தனது பயணத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை நாம் பின்தொடர்கிறோம். வேலைவாய்ப்பு நேர்காணல்கள், தொடர்ச்சியான நிராகரிப்புகள் மற்றும் அன்றாட வேலை தேடலின் சவால்களை அவர் எதிர்கொள்ளும் விதம், இந்த புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மை நிலையை நமக்கு நெருக்கமாகக் காட்டுகிறது. இன்றைய இந்தியாவில் ஒரு இளம் பட்டதாரி வேலை பெறுவதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறது என்பதையும் அவரது கதை வெளிப்படுத்துகிறது.
இந்த காணொளி கடந்த ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் படமாக்கப்பட்டது.
விரிவாக காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



