டெல்லி விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர்
டெல்லி விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர்
பிரசுரிக்கப்பட்டது
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்குள், அத்துமீறி நுழைய முயன்ற நபரை சிஐஎஸ்எஃப் வீரர்கள் துரத்திப் பிடிக்கும் காட்சி இது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-3க்குள் ஒருவர் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சிக்கும் 25 விநாடிகள் கொண்ட, தேதி குறிப்பிடப்படாத காணொளியை சிஐஎஸ்எஃப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
முறையான பயண ஆவணங்களின்றி உள்ளே நுழைய முயன்ற நபர் சில விநாடிகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் அங்கீகாரமற்ற நுழைவு தடுக்கப்பட்டு, ஏற்படவிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டதாகவும் சிஐஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.
விரிவாகக் காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



