காணொளி: நெதன்யாகு பேச்சை புறக்கணித்து வெளியேறிய ஐ.நா. பிரதிநிதிகள்

காணொளிக் குறிப்பு, ஐநா சபையில் இஸ்ரேல் பிரதமர் உரைக்கு முன் பிரதிநிதிகள் வெளிநடப்பு
காணொளி: நெதன்யாகு பேச்சை புறக்கணித்து வெளியேறிய ஐ.நா. பிரதிநிதிகள்
பிரசுரிக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியபோது, பல நாடுகளைச் சேர்ந்த டஜன் கணக்கான பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாலத்தீன தூதரகத்தின் அழைப்பின் பேரில் இந்த வெளிநடப்பு ஒருங்கிணைக்கப்பட்டது. பிரதிநிதிகள் வரிசையாக அரங்கை விட்டு வெளியேறியதால் பல இருக்கைகள் காலியாகக் காணப்பட்டன. வெளிநடப்புக்கு பதிலளித்த நெதன்யாகு, "இன்னும் அரங்கில் இருந்து வெளியேறாத ஏதேனும் தார்மீக கோழைகள் இருந்தால், தயவுசெய்து இப்போதே வெளியேறுங்கள்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு