சோவியத் எரிவாயுக் குழாய்களுக்குள் சண்டையிடும் யுக்ரேன் வீரர்கள்

காணொளிக் குறிப்பு, சோவியத் எரிவாயுக் குழாய்களுக்குள் சண்டையிடும் யுக்ரேன் வீரர்கள்
சோவியத் எரிவாயுக் குழாய்களுக்குள் சண்டையிடும் யுக்ரேன் வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஏழு மாதங்களாக, யுக்ரேன் படையினர் கார்கிவ் பகுதியில் உள்ள பழைய சோவியத் கால எரிவாயுக் குழாய் ஒன்றுக்குள் தங்கியிருந்து ரஷ்யப் படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.

ஒரு மீட்டருக்கும் சற்று அதிகமான விட்டம் கொண்ட இந்தக் குழாய்க்குள் தவழ்ந்து மட்டுமே செல்ல முடியும். இருப்பினும், போர்முனைக்கு மேலே வானம் முழுவதும் டிரோன்கள் நிறைந்திருக்கும் தற்போதைய சூழலில், இந்தக் குழாய்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக உள்ளன. மேலும், இரு தரப்பினரும் முன்னேற முடியாதபடி டிரோன்கள் தடையாக உள்ளன.

இந்த நிலத்தடி மோதல் நடைபெறும் எரிவாயுக் குழாய்க்குள் நுழைந்த முதல் சர்வதேச ஒளிபரப்பு நிறுவனம் பிபிசி ஆகும். அந்தக் குழாய்க்குள் எப்படி இருக்கும் என்பதை இந்தக் காணொளி காட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு