காவியா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்ய தருணங்கள்

காணொளிக் குறிப்பு, காவியா மாறன், அனிருத் திருமண வரவேற்பில் பங்கேற்ற பிரபலங்கள்
காவியா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்ய தருணங்கள்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் சனிக்கிழமை அன்று இசையமைப்பாளர் அனிருத், காவியா மாறன் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குடியரசு துணை தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஜோசப் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்று தம்பதிகளை வாழ்த்தினர்.

அதோடு தெலங்கானா மற்றும் கேரள முதலமைச்சர்கள் ரேவந்த் ரெட்டி, சதீசன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு