தான்சானியாவில் பாறை மீது மோதிய பயணிகள் கப்பல்

காணொளிக் குறிப்பு, பாறை மீது மோதிய பயணிகள் கப்பல்
தான்சானியாவில் பாறை மீது மோதிய பயணிகள் கப்பல்
பிரசுரிக்கப்பட்டது

தான்சானியாவில் எம்வி முவான்சா கப்பல் பாறைகள் மீது மோதியது. கப்பலின் கட்டுப்பாட்டை ஊழியர்கள் இழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கப்பல் அதிகபட்சமாக 1,200 பயணிகளையும், 400 டன் சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு