அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டியை சுத்தியால் அடித்த மாணவர்

காணொளிக் குறிப்பு, ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி வைக்கப்பட்டிருந்த காட்சிப் பெட்டியின் கண்ணாடியை உடைத்த மாணவர்
அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டியை சுத்தியால் அடித்த மாணவர்
பிரசுரிக்கப்பட்டது

ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி வைக்கப்பட்டிருந்த காட்சிப் பெட்டியின் கண்ணாடியை மாணவர் ஒருவர் அடித்து நொறுக்கும் காட்சி இது

பெர்த் அருங்காட்சியகத்தில் பிரெஞ்சு மாணவர் ஒருவர் சுத்தியலால் காட்சி பெட்டியின் கண்ணாடியை சேதப்படுத்தும் காட்சி இது. 36 வயதான அர்னாட் ஹெர்குலஸ் ஹாரிக்ஸ்கால்ட் லோகன், ஸ்காட்லாந்தின் மன்னர்கள் பாரம்பரியமாக முடிசூட்டப்பட்ட 'ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி' கல்லின் மீது அமர்வது தனது "பிறப்புரிமை" என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது கல்லுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. காட்சி பெட்டியின் கண்ணாடியை சேதப்படுத்திய குற்றத்தை லோகன் ஒப்புக்கொண்டுள்ளார், அவருக்கு ஜனவரி மாதம் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு