காணொளி: ஃப்ளைதுபை விமான சம்பவம் குறித்து விவரித்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு, ஃப்ளைதுபை விமான சம்பவம் குறித்து விவரித்த டிரம்ப்
காணொளி: ஃப்ளைதுபை விமான சம்பவம் குறித்து விவரித்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

ஃப்ளைதுபை விமான சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விவரித்துள்ளார்.

அவர் கூறுகையில், "பிளம்பர், ஒரு இஸ்ரேலிய பிளம்பர் அங்கு இருந்தார். அவர் இதற்கு முன்பு விமானத்தை ஓட்டியதே இல்லை. விமானத்தில்கூட மிகவும் அரிதாகத்தான் பயணம் செய்திருக்கிறார். ஆனால் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தார். விமானியின் அலறல் சத்தத்தையும் கேட்டார்.

அவர் விமானத்தின் முன்பகுதியில் இருந்தார். பாதுகாப்புப் பணியாளர்களும் மற்றொரு விமானக் குழு உறுப்பினரும் பின்பகுதியில் இருந்தனர். ஆனால் அவர்களால் உடனடியாகச் செயல்பட முடியவில்லை.

விமானம் நம்பமுடியாத அளவுக்கு ஒரு கோணத்தில் வேகமாகக் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த அளவுக்கு வேகமாகச் சென்றதால், விமானத்தின் பின்பகுதியில் இருந்த வால் பகுதியே கழன்று விழுந்தது. அந்த அளவிலான வேகத்தில் செல்லும் வகையில் அந்த விமானம் வடிவமைக்கப்படவில்லை. அதன் வரம்புகளைவிட மிகவும் அதிகமான வேகத்தில் அது சென்றுகொண்டிருந்தது.

அப்போது ஏற்பட்ட G-விசையின் காரணமாக, அந்த பிளம்பர் அந்த நபரை இருக்கையிலிருந்து பிடுங்கி பின்னால் தூக்கி வீசினார். மற்ற பயணிகளும் அவரைப் பிடித்துக்கொண்டனர்.

விமானத்தில் இதற்கு முன்பு ஒருபோதும் விமானத்தை இயக்கிய அனுபவம் இல்லாத அந்த பிளம்பர், விமானத்தின் கட்டுப்பாட்டுக் கம்பியைப் பிடித்து மேலே இழுத்து, விமானத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார். இல்லையென்றால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கும்.

இது எனக்குக் கிடைத்த கதை. இது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நெதன்யாகுவிடமிருந்தும், அதற்கு முன்பாக இதுகுறித்து பேசியிருக்கக்கூடிய மேலும் சிலரிடமிருந்தும் நான் கேட்ட கதை இதுதான்.

இந்தக் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை." என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு