காணொளி: 'சிஎன்என் இங்கு வந்திருக்கக் கூடாது' - செய்தியாளரிடம் கூறிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'சிஎன்என் இங்கு வந்திருக்கக் கூடாது' - செய்தியாளரிடம் கூறிய டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

சில செய்தி நிறுவனங்கள் தனது குழுவைப் பற்றி தவறான அல்லது கற்பனையான தகவல்களைப் பரப்பி வருவதாகக் கூறி, பொலிடிகோ, சிஎன்என் மற்றும் எம்எஸ் நவ் ஆகியவற்றை வெள்ளை மாளிகைக்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் தடை விதித்தார்.

ஆனால், ஊடகங்கள் என்ன செய்தி வெளியிட வேண்டும் என்பதை அரசாங்கம் ஆணையிட முடியாது என்று கூறிய அந்த மூன்று நிறுவனங்களும், டிரம்பின் முடிவை சட்டரீதியாக எதிர்த்துப் போராடப்போவதாக ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வந்த சிஎன்என் செய்தியாளரிடம் நீங்கள் இங்கு வந்திருக்கக் கூடாது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு