காணொளி: ஆப்பிள் ஏன் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்தியுள்ளது?
மடிக்கக்கூடிய ஐபோன் குறித்து பிபிசி செய்தியாளர் லில்லி ஜமாலி கூறியவை:
"இதன் பெயர் ஐபோன் டூயோ
ஆம், இதை மடிக்க முடியும். ஆனால் ஆண்டுக்கணக்கில் போன்கள் பெரிதாகவும், மெலிதாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திடீரென்று நமக்கு ஏன் இது வேண்டும்?
இதை மடித்து வைத்திருக்கும் போது, என்னுடைய தற்போதைய ஐபோனை விட சிறியதாக, ஒரு பாஸ்போர்ட் அளவில் இருக்கும். திறந்தால், மிகப் பெரிய ஸ்க்ரீன் இருக்கும்.
இதில் சில சமரசங்கள் உள்ளன. கேமரா, சில உயர்தர ஸ்மார்ட்போன்களைப் போல சிறப்பானதாக இல்லை, மேலும் பேட்டரி லைஃபும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
ஆனால் அந்த சமரசங்கள் மிகக் குறைவு என்று ஆய்வாளர்கள் என்னிடம் கூறுகிறார்கள். மேலும், இந்தச் சந்தைக்கு ஆப்பிள் மிகவும் தாமதமாகவே வந்திருக்கிறது.
சாம்சங், ஷாவோமி மற்றும் ஹுவாவே ஆகியவை பல ஆண்டுகளாக மடிக்கக்கூடிய போன்களை தயாரித்து வருகின்றன. ஷாவோமி மற்றும் ஹுவாவே தங்களுடைய சமீபத்திய மாடல்களையும் இப்போதுதான் வெளியிட்டுள்ளன.
ஸ்மார்ட்போன் சந்தையில்மடிக்கக்கூடிய போன்களின் பங்கு வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. எனவே பெரும்பாலான மக்கள் இதுவரை விரும்பாத ஒரு பொருளுக்காக, அதிக பணம் செலுத்துமாறு ஆப்பிள் மக்களைக் கேட்டுக்கொள்கிறது.
மடிக்கக்கூடிய ஒரு போன் நமக்குத் தேவை என்று அது நம்மை சம்மதிக்க வைக்க முடியுமா?" என தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



