ஹோர்மூஸ் நீரிணை: இரான் முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு, காணொளி: இரான் ஒப்பந்தத்தை நிராகரித்த அதிபர் டிரம்ப் - "ஹோர்மூஸ் நீரிணை எங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளது"
ஹோர்மூஸ் நீரிணை: இரான் முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

"இரான் முன்மொழிந்த ஒப்பந்தத்தை நான் நிராகரித்துவிட்டேன்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

"இரான் தற்போது மிக மோசமான நிலையில் இருப்பதால், உடனடியாக ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்கும் வகையிலான புதிய ஒப்பந்தத்தைச் செய்ய விரும்புகிறது. ஆனால், அந்த குறிப்பிட்ட ஒப்பந்தம் எங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஹோர்மூஸ் நீரிணையின் முழு கட்டுப்பாடும் தற்போது எங்களிடம் தான் உள்ளது. அங்கிருந்து பெருமளவிலான எண்ணெய் வெளியேறி வருகிறது; நேற்று இரவு மட்டும் 29 கப்பல்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன. அவர்கள் அழிந்து கொண்டிருப்பதால் தான் உடனடியாக இந்த நீரிணையைத் திறக்கத் துடிக்கிறார்கள். எனக்கும் ஒப்பந்தம் செய்வதில் விருப்பம் உண்டு, ஆனால் அது அமெரிக்காவிற்குச் சாதகமானதாக இருக்க வேண்டும்" என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு