புதினை நண்பர் என அழைத்தது பற்றி டிரம்ப் கூறியது என்ன?
செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம், "அதிபர் அவர்களே.. உங்கள் சீன பயணம் தொடர்பாக ஒரு கேள்வி.
அங்கு சென்றிருந்தபோது, புதின் உங்கள் நண்பர் என்று கூறினீர்கள். ரஷ்யா, இரானின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. புதின் அமெரிக்காவின் நண்பர் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என கேள்வியெழுப்பினார்.
டிரம்ப் அதற்கு பதிலளிக்கையில், "புதினுக்கும் எனக்கும் இடையிலான உறவு உண்மையில் நன்றாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அவரிடம் ஏராளமான அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் 2வதாக உள்ளார். இதனால் நமக்குக் கூடுதல் வலிமை கிடைக்கிறது என நினைக்கிறேன்.
தற்போது அவர் கடினமான சூழலை எதிர்கொள்கிறார். ஒரே நாளில் முடிய வேண்டிய போர், ஐந்து ஆண்டுகளாக நீடிக்கிறது. இரு தரப்பிலும் பலர் கொல்லப்படுகின்றனர். இந்தப் போர் முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். புதினுடன் எனக்கு மிக சிறந்த உறவு இருக்கிறது என கருதுகிறேன். அது நல்ல விஷயம். ஷி ஜின்பிங்குடனும் எனக்கு சிறந்த உறவு இருக்கிறது. அதுவும் நல்ல விஷயம்தான். இதன் காரணமாகவே நமது நாடு பாதுகாப்பாக இருக்கிறது." என தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



