புதினை விட டிரம்புக்கு ஜின்பிங் அதிக முக்கியத்துவம் அளித்தாரா?

காணொளிக் குறிப்பு, சீனாவில் புதினை புறக்கணித்தாரா ஷி ஜின்பிங்?
புதினை விட டிரம்புக்கு ஜின்பிங் அதிக முக்கியத்துவம் அளித்தாரா?
பிரசுரிக்கப்பட்டது

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் டிரம்ப் சீனா வந்தபோது, சீன அதிபர் ஷி ஜின்பிங் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கே வருகை தந்திருந்தார்.

ஆனால், புதின் சீனாவிற்கு வந்தபோது, அவரை வரவேற்கும் பொறுப்பு ஷி ஜின்பிங்கின் தலைமை அதிகாரியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சாய் கி வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

செளத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், சீனாவின் அரசுத் தலைவர் ஒருவர் வெளிநாட்டுத் தலைவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு நேரில் சென்ற நிகழ்வு கடைசியாக 1959ஆம் ஆண்டில்தான் நடைபெற்றது என்று குறிப்பிட்டிருந்தது.

டிரம்பிற்கு அளிக்கப்பட்ட இந்த அரிய வரவேற்பு வெறும் சம்பிரதாய நிகழ்வுகளாக அமையவில்லை. அமெரிக்காவுடனான உறவில் பரஸ்பர மரியாதை, ராஜதந்திர நெருக்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கு சீனா அளிக்கும் முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் இவை அமைந்திருந்தன.

இதனால் ஜின்பிங் தனது 'பழைய நண்பர்' புதினை விட, புதிய நண்பர் டிரம்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு