BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'ரத்தம் தோய்ந்த சட்டை' - இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் - நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன?
இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் விமானிகள் இடையே ஏற்பட்ட சண்டையில் 'சட்டைகள் முழுக்க ரத்தம் தோய்ந்து இருந்ததாக' பயணிகள் விவரிக்கின்றனர். என்ன நடந்தது?
பெண் யூட்யூபரின் 'வீடியோக்களால்' ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளை - நால்வர் சிக்கிய பின்னணி
நாகர்கோயிலில் யூட்யூபர் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்து, திட்டமிட்டு, அவரது வீட்டில் சுமார் 110 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் சிக்கியது எப்படி?
செளதி ஆதரவு படைகள் - ஹூத்திகள் மோதும் ஏமனின் முன்கள நகரில் நடப்பது என்ன?
ஏமனின் மோதல் பகுதிக்கு அரிதாகக் கிடைக்கும் அணுகல் வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசாங்க ஆதரவுப் படைகளின் வீரர்களுடன் பிபிசி (BBC) போர்க்களத்தின் முன்னணிக் கோட்டிற்குச் செல்கிறது.
அமெரிக்காவில் 41 ஆண்டு சிறையில் இருந்த மரண தண்டனை கைதிக்கு 71 வயதில் 'புதிய ஆதாரத்தால்' நடந்த திருப்பம்
அமெரிக்காவில் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, 41 ஆண்டுகள் மரண தண்டனை கைதியாக இருந்த நபர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிதாக ஆய்வு செய்யப்பட்ட டிஎன்ஏ ஆதாரங்கள் அவருக்கும் அந்தக் குற்றத்துக்கும் தொடர்பு இருப்பதை நிரூபிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உங்களுக்கு ஏற்ற சரியான தலையணையை எப்படி தேர்வு செய்வது? 4 கேள்வி - பதில்
மான்செஸ்டர் ஸ்கூல் ஆஃப் பிசியோதெரபியில் இணைப் பேராசிரியராக இருக்கும் மெக்கார்த்தி, சரியான தலையணை என்பது நீங்கள் எந்த நிலையில் தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும் என்கிறார்.
காணொளி, 'எனது உயிரையும் பொருட்படுத்தாமல்தான் இதை செய்தேன்' - கோவையில் காரின் மேற்கூரையில் இருந்தபடி துரத்திச் சென்றார் காவலர், கால அளவு 2,38
'எனது உயிரையும் பொருட்படுத்தாமல்தான் இதை செய்தேன்' - கோவையில் காரின் மேற்கூரையில் இருந்தபடி துரத்திச் சென்றார் காவலர்
ஏ.ஐ முதலை படத்தால் சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு என்ன நேர்ந்தது?
சிங்கப்பூரில் பிரபலமான நீர்த்தேக்கத்தில் உவர்நீர் முதலை இருப்பது போன்ற ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட படத்தைப் பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் சர்ச்சை - '600 ஆண்டுகள்' பழைய ஷாஹி மசூதியின் வரலாறு என்ன?
2028 சிம்ஹஸ்த் கும்பமேளாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகளின் போது, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உஜ்ஜைன் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றியதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் சட்ட ஆவணங்கள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.
சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட மனைவியை 13 ஆண்டுகளாக கடலில் மூழ்கி 'தேடும்' கணவர்
யசுவோ தகமாட்சுவின் மனைவி யூகோ, 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யசுவோ கடலில் மூழ்கிக் கற்றுக்கொண்டார். அதன்பிறகு, யூகோவை நினைவுகூரவும், அவருடனான அன்பையும் தொடர்பையும் தொடர்ந்து பேணவும், மாதத்திற்கு இரண்டு முறை கடலுக்குள் சென்று வருகிறார்.
கவின் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகை ரத்து - என்ன நடந்தது?
பாளையங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
ஐஐடி-யில் சாதிப் பாகுபாடு மாணவர்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது? உதவி கிடைக்கிறதா?
ஐஐடி போன்ற பிரபல கல்வி நிறுவனங்களில்கூட சாதிப் பாகுபாடு பல்வேறு வடிவங்களில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி மாணவர்களை பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகைய நிலையில் அவர்களுக்குத் தேவைப்படும் உளவியல் ஆதரவும் உதவியும் முறையாகக் கிடைக்கிறதா?
சிவராசா அனோஜன்: சௌதியில் மரண தண்டனை நிறைவேற்று சிறைக்கு மாற்றப்பட்ட இலங்கைத் தமிழர் - என்ன சிக்கல்?
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜன் தண்டனை நிறைவேற்று சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரண தண்டனையைத் தடுக்கும் முயற்சியை இது சிக்கலாக்குமா?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இடைத்தேர்தல்: மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு
மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால், அதற்கான எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளில் தொகுதி மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு
உங்கள் வீட்டில் சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் மானியம் பெறுவது எப்படி? செலவு, வங்கிக்கடன், பராமரிப்பு உள்பட முழு விவரம்
தமிழ்நாட்டில் பருவமழைக் காலத்திலும் வெயில் இன்னும் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலை பயன்படுத்தி சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், மின் கட்டணத்தை பெருமளவில் குறைக்க முடியுமென்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.
அரசு மாணவர் விடுதியில் மாட்டிறைச்சி கோரிக்கை: அமைச்சர் வன்னிஅரசு பேச்சால் சர்ச்சை
தமிழகத்தில் சமூகநீதித்துறையின் கீழ் செயல்படும் அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க வேண்டுமென்ற மாணவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியது சர்ச்சையாகியுள்ளது. என்ன நடக்கிறது?
பாலே இல்லாமல் தயாராகும் செயற்கை பனீரை கண்டறிவது எப்படி? 5 முக்கிய விஷயங்கள்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பால் சார்ந்த பொருட்கள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்படும் செயற்கை பொருட்களுக்கு (analogue products) “பனீர்” என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
26 வயது ஆண் உடலில் கருப்பை: குழந்தையின்மையால் மருத்துவரை சந்தித்த போது தெரியவந்த அதிர்ச்சி
டெல்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பிரச்னைக்காக மருத்துவரை அணுகியுள்ளார். அவரைப் பரிசோதித்தபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருமுட்டைக் குழாய்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
திருவள்ளூர் கழிவுநீர் கூவத்தில் கலப்பது செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி பாதிக்கக்கூடும்?
திருவள்ளூர் நகராட்சி தனது கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது என்று தமிழக அரசின் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நீர் செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைவதால் சென்னைவாசிகளின் குடிநீர் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
'சோவியத்' விமானத்தை எல்லை தாண்டி ஆப்கன் வீரர் ஓட்டி வந்ததால் பாகிஸ்தான் சந்தித்த புதிய சவால்
1979, மார்ச் 23 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் சிறப்புப் பகுப்பாய்வு அறிக்கை, சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானை வந்தடைவதற்கு முன்பே ஆப்கானிய ராணுவத்தில் தொடர்ச்சியான கிளர்ச்சிகள் தொடங்கியிருந்தன என்பதைக் காட்டுகிறது.
'தமிழ் ஈழப்பெண்' என்று கூறியதற்காக எதிர்ப்பை சந்திக்கும் நடிகை - யார் இவர்?
"நான் தமிழ் பெண். என் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது. என் கலாசாரம் தமிழ். என் நாடு கனடா. என் வேர்கள் இலங்கையில் இருக்கின்றன." கனடா நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறிய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்கள் விவாதப்பொருளாகியுள்ளன.
யானைகள் சில தாவரங்கள் மூலம் தமக்குத் தாமே மருத்துவம் செய்யும் - ஆய்வில் புதிய தகவல்
கென்யாவின் மவுண்ட் எல்கான் பகுதியில் வாழும் ஆப்பிரிக்க யானைகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள 35-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த திமிங்கலத்திற்கு ஒரு கப்பலையே கவிழ்க்கும் ஆற்றலை தரும் 'மர்ம உறுப்பு'
'மொபி டிக்' நாவலுக்கு உத்வேகமாக அமைந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பிய ஒருவருக்கு, திமிங்கலம் தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு அழிக்க முடியும் என்பது குறித்து ஒரு கோட்பாடு இருந்தது. 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அது உண்மையாக நிரூபிக்கப்பட்டு
ஒரே இடத்தில் 23 ஆயிரம் பேரை கழுவேற்றி ஒட்டோமான் படையை விரட்டிய நிஜ 'டிராகுலா' கதை
இலக்கியக் கதாபாத்திரமான டிராகுலாவிற்கு அடிப்படையாக இருந்த, 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வலாக்கியா இளவரசர் 'விளாட் தி இம்பேலர்', ஒட்டோமான் படையெடுப்புகளுக்கு எதிராகக் கொடூரமான 'கழுவேற்றம்' மற்றும் போர்த்தந்திரங்களைக் கையாண்டு பேரழிவை ஏற்படுத்தியதால் ஒருபுறம் இரத்தவெறி பிடித்த கொடுங்கோலனாகவும், மறுபுறம் ருமேனியாவின் தேசிய நாயகனாகவும் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்.
சிஎஸ்கே புதிய பயிற்சியாளர் ஜாகீர் கானுக்கு தோனியுடனான நட்பு எவ்வாறு உதவும்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜஹீர் கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ஸ்டீஃபன் ஃபிளெமிங் விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































