'பெண்களின் வாழ்க்கையை மாற்றும் மின்சார ஆட்டோக்கள்' - மகாராஷ்டிராவில் ஒரு வெற்றிக் கதை
மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒரு பெரிய மாற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. இங்குள்ள பல ஆட்டோக்கள் பச்சை நிற நம்பர் பிளேட்டுகளைக் கொண்டுள்ளன, அவை மின்சார வாகனங்கள் என்பதை இது குறிக்கிறது.
இவற்றில், மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சமீபத்தில் 'தி எர்த்ஷாட் பிரைஸ்' விருதில் அங்கீகாரம் பெற்றுள்ளன. உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குப் புத்தாக்கமான தீர்வுகளைத் தேடும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
மஹிந்திராவின் மின்சார ஆட்டோ முயற்சி, இந்தியாவில் மின்சார வாகனங்கள் மூலம் கடைசி மைல் வரையிலான (last-mile) போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் அதன் பணிக்காக, 'எர்த்ஷாட் பரிசு' 2026-ஐ 'தூய்மையான காற்று' (Clean Our Air) பிரிவில் வென்றுள்ளது. இளவரசர் வில்லியம் அவர்களால் நிறுவப்பட்ட இந்தப் பரிசானது, 1 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவியைக் கொண்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா, செவ்வாய்க்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது.
மின்சார ஆட்டோக்கள் பெண்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



