கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

பட மூலாதாரம், X/ VS Babu
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்.
சுவாசப் பிரச்னை காரணமாக, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை அளித்தும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை கூறியுள்ளது.

பட மூலாதாரம், VS Babu
கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு தேற்கடித்தார்.
வி.எஸ்.பாபு 2006 - 2011 காலகட்டத்தில் திமுக சார்பில் அப்போதைய புரசைவாக்கம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். அதன் பிறகு அதிமுகவில் இணைந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தவெகவில் இணைந்த நிலையில் கொளத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வெற்றி சான்றிதழைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.எஸ். பாபு, "விஜய் எந்த வழியில் செல்கிறாரோ அந்த வழியில் நாங்கள் தொண்டனாக இருந்து செயல்படுவோம்." என்றார்.
திமுகவிலிருந்து விலகியது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், "கட்சியிலிருந்து யாரும் வெளியேற்றவில்லை. நானாக தான் வெளியேறினேன்." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































