காணொளி: 200 யூனிட் மின்சாரம் - விஜய் சொன்னதும் செய்ததும்

காணொளி: 200 யூனிட் மின்சாரம் - விஜய் சொன்னதும் செய்ததும்

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு உள்ளிட்ட 3 அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தவெக தேர்தல் அறிக்கையில் தகுதிவாய்ந்த வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே உள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதில் வீடுகளில் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் இலவசம் என்றும், 500 யூனிட்டுக்குள் என்றால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு