காணொளி: ‘இரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, பிரிட்டன் அரசரும் இதில் உடன்படுகிறார்’- டிரம்ப்

காணொளி: ‘இரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, பிரிட்டன் அரசரும் இதில் உடன்படுகிறார்’- டிரம்ப்

“இரான் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் என்னை விடவும் இதில் அதிகம் உடன்படுகிறார்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“தற்போது நாங்கள் மத்திய கிழக்கில் சில பணிகளை மேற்கொண்டு வருகிறோம், உங்களில் சிலருக்கு அது தெரிந்திருக்கலாம், நாங்கள் அதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். அந்த எதிரியை நாங்கள் ராணுவ ரீதியாகத் தோற்கடித்துள்ளோம்; அந்த எதிரி அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. சார்ல்ஸ் என்னை விடவும் இதில் அதிகம் உடன்படுகிறார். அது அவர்களுக்கே தெரியும். தற்போது இதை அவர்கள் மிகவும் வலுவாக உணர்ந்துள்ளனர்.” என்று நேற்று (ஏப்ரல் 28) டிரம்ப் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு