You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மேற்கு வங்கத்தில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியான இன்று நடந்து வருகிறது.
ஹவுராவின் பாலி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், காலை 7:00 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மாற்றாக கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும் சரியாக செயல்படவில்லை என்றும் இதனால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டதாகவும் அப்பகுதி வாக்காளர்கள் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து வாக்காளர்களுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் இருவரை தடுப்பு காவலில் வைத்துள்ளனர். பின்னர் காலை 8:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு