காணொளி: பிரதமர் மோதியின் நார்வே பயணத்தின் போது என்ன நடந்தது.

காணொளிக் குறிப்பு, பிரதமர் மோதியின் நார்வே பயணத்தின் போது என்ன நடந்தது.
காணொளி: பிரதமர் மோதியின் நார்வே பயணத்தின் போது என்ன நடந்தது.
பிரசுரிக்கப்பட்டது

நார்வேயில் நடைபெற்ற இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸை சந்தித்த பிறகு, நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது.

இந்த இரு சம்பவங்களும் இந்தியாவில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மெஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பலர் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு