தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
பிபிசி தமிழின் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பக்கம்: சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான கட்டுரைகள், காணொளிகள், குறுங் காணொளிகள், பிரச்னைகளைப் பேசுவோம் பகுதி, மகளிர் குரல் நிகழ்ச்சி, உங்கள் குரல் பகுதி உள்ளிட்டவற்றை இந்தப் பக்கத்தில் காணலாம்.
சிறப்புச் செய்திகள்
'தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி.க்கள்' என்ற அமித் ஷா வாக்குறுதியை ஏற்பதில் என்ன சிக்கல்? நீலகண்டன் பதில்
இந்தியாவி்ல தொகுதி மறுவரையறை செய்யும் விவகாரம் நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து எழும் கேள்விகள், தீர்வுகள் குறித்து 'தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு' (South Vs North : India's Great Divide) நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டனிடம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கலந்துரையாடினார். அதன் விவரம் கேள்வி - பதில் வடிவில்..
மு.க.ஸ்டாலின் 4-வது முறையாக போட்டியிடும் கொளத்தூர் தொகுதி கள நிலவரம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று பிரசாரம் செய்து வரும் நிலையில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கள நிலவரம் என்ன?
எடப்பாடி தொகுதியில் 8 வது முறையாக போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி - கள நிலவரம் என்ன?
சேலத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில் 8வது முறையாக களம் காண்கிறார் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. அந்த தொகுதியின் கள நிலவரம் என்ன?
திமுக சார்பில் ரூ.8,000 கூப்பன் விநியோகமா? கோவை தெற்கில் அதிமுக புகாரின் பின்னணி
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில், வாக்காளர்களுக்கு ரூ.8000 கூப்பனை திமுக வழங்குவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்த அதிமுக புகார் குறித்து திமுக என்ன சொல்கிறது?
விஜய் பரப்புரை மட்டும் அடுத்தடுத்து ரத்தாக என்ன காரணம்?
தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே பரப்புரை செய்துள்ள தவெக தலைவர் விஜய், 3 நாட்கள் தனது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.
மகளிர் குரல்
தேர்தல் பார்வை
தமிழ்நாடு தேர்தல் முந்தைய தேர்தல்களைவிட எந்த வகையில் மாறுபடுகிறது? 5 விஷயங்கள்
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் முதல் விஜயின் அரசியல் பிரவேசம் வரை, திராவிட கட்சிகளின் லட்சியங்கள் முதல் தேசிய அளவிலான முக்கியத்துவம் வரை, பல காரணிகள் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலை தனித்துவமான வழிகளில் வடிவமைக்கின்றன.
'மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை': தமிழக தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்ததுமே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அது பேசுபடுபொருளாகிவிட்டது. மறுநாளே தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் மோதி, ராகுல்காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அதுதொடர்பாக எதிரணியைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர். என்ன நடக்கிறது?
'ஊர் பெயரால் பள்ளி, கல்லூரி, வங்கிகளில் அவமானம்' - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கூறும் கிராமம்
சாதிய அடையாளத்தின் அடிப்படையில் இருக்கும் தங்கள் ஊரின் பெயரால் தாங்கள் பல அவமானங்களை எதிர்கொள்வதாக ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகத் தாங்கள் இந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்னைகளில் ஒன்றான தண்ணீர் இந்தத் தேர்தலில் கவனம் பெறுமா?
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் மக்களின் அன்றாட வாழ்வை நேரடியாகப் பாதித்து வருகின்றன. ஆனால், அவை ஒரே மாதிரியான பிரச்னைகள் அல்ல.
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள்: தமிழ்நாட்டு பெண்கள் எதன் அடிப்படையில் வாக்களிக்கின்றனர்?
உண்மையில் வாக்களிக்கும் பெண்கள் வாக்களிக்கும்போது தங்கள் மனதில் என்னென்ன விஷயங்களை யோசித்து வாக்களிக்கின்றனர்? அரசியல் கட்சிகளிடமிருந்து எதை அவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பெண்கள் எதன் அடிப்படையில் வாக்களித்தனர்.
தமிழ்நாடு: யார் ஆட்சியில் எவ்வளவு கடன் வாங்கப்பட்டது? திமுக - அதிமுக அரசுகள் பற்றிய ஓர் ஒப்பீடு
2026 சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் தமிழக அரசின் கடன் தொகை அதிகளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஒரு மாநிலத்தின் கடன் எந்தளவில் எவ்வாறு கையாளப்படுகிறது, கடன் தொகை அதிகரிப்பது அரசின் நிதி நிர்வாக மேலாண்மையைச் சுட்டிக்காட்டும் குறியீடா என்ற கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன.
















































