காணொளி: டெல்லியில் தடையை மீறி போராட்டம் – தடுப்புக் காவலில் மமதா பானர்ஜி

காணொளிக் குறிப்பு, டெல்லியில் தடையை மீறி போராட்டம் – தடுப்புக் காவலில் மம்தா பானர்ஜி
காணொளி: டெல்லியில் தடையை மீறி போராட்டம் – தடுப்புக் காவலில் மமதா பானர்ஜி
பிரசுரிக்கப்பட்டது

வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜிநாமாவை வலியுறுத்தி டெல்லி சவுத் அவென்யூ பகுதியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மமதா பானர்ஜி இன்று (அக்டோபர் 10, 2026) டெல்லி போலீஸாரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார். முன்னதாக, ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவிருந்த போராட்டத்திற்குச் செல்ல முயன்ற மமதா பானர்ஜியைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் சவுத் அவென்யூ பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, மமதா பானர்ஜி தனது வாயில் 'பேண்ட்-எய்ட்' ஒட்டிக்கொண்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் மமதா பானர்ஜி மற்றும் அவருடன் தர்ணாவில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களான டெரிக் ஓ பிரையன், டோலா சென், பிரதிமா மண்டல் உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்களை வலுக்கட்டாயமாகக் தடுப்பு காவலில் எடுத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு