காணொளி: சென்னையில் போராட்டம் நடத்திய சிஜேபி ஆதரவாளர்கள் - தடுப்பு காவலில் வைத்த போலீஸ்
காணொளி: சென்னையில் போராட்டம் நடத்திய சிஜேபி ஆதரவாளர்கள் - தடுப்பு காவலில் வைத்த போலீஸ்
பிரசுரிக்கப்பட்டது
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் ராஜிநாமாவை வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் "டெல்லி சலோ" போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி இந்த எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் ஒன்று திரண்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களைப் போலீஸார் குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று தடுப்புக் காவலில் வைத்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



