காணொளி: அருவியில் அதிகரித்த நீர்வரத்து - பாறையில் சிக்கிய இளைஞர்கள்
காணொளி: அருவியில் அதிகரித்த நீர்வரத்து - பாறையில் சிக்கிய இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா பகுதியில் உள்ள ஓர் அருவியில் 150 அடி ஆழத்தில் உள்ள ஒரு பாறையில் 4 இளைஞர்கள் சிக்கித் தவிக்கும் காட்சி இது.
நாக்பூரைச் சேர்ந்த இந்த நான்கு இளைஞர்களும் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் உள்ள குக்ரிஹாபா அருவிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது திடீரென நீரின் அளவு அதிகரித்ததால் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.
காவல்துறையினர் மற்றும் SDRF மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நான்கு பேரையும் பாத்திரமாக மீட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் விதர்பா எல்லைக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக சில ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



