போராட வந்தவர்களை தடுப்புக் காவலில் வைத்த டெல்லி காவல்துறை
"டெல்லியில் இதுபோன்று போராட்டங்கள் நடக்கும்போதெல்லாம், போலீசார் போராட்டக்காரர்களை பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் செல்கின்றனர். இந்த போராட்டக்காரர்களை அழைத்துச் செல்ல 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் குவிக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களின் குழு ஒன்றாகக் கூடியதும், அவர்கள் காவலில் வைக்கப்படுகின்றனர். எனவே, இன்றைய போராட்டத்தின் போது, காவலில் வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
நாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எங்களது உரிமைக்காக எங்களால் இன்று போராட முடியாது. மோதி அரசாங்கத்தில் முழுமையான சர்வாதிகாரமும் குண்டர் அரசும் நிலவுகிறது. இன்று ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்ய வைப்பதற்காக வந்தோம்." - இது டெல்லி போராட்டக்களத்தில் ஒருவரின் குரல்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் தொடர்பாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஜந்தர் மந்தரில் டெல்லி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக் களத்திற்கு வந்தவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



