காணொளி: நேபாளம் - திபெத் பேரிடரின் உண்மை நிலை வெளிவருவதை சீனா தடுக்கிறதா?
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 4,000 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த 30ம் தேதி நிலவரப்படி திபெத்தில் இந்த வெள்ளத்தால் 16 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இயற்கைப் பேரிடரில் 261 வெளிநாட்டினர் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு 9.30 மணி வரை வெளியிட்ட நிலவரத்தின்படி , சுமார் 500 இந்தியக் குடிமக்கள் தற்போது சீனப் பகுதியில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் திபெத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவின் உண்மை நிலை வெளிவருவதை சீனா தடுக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து சீனாவின் பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன? என்பது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



