காணொளி: நேபாளத்தில் வேகமாக நிரம்பும் ’லேக் 2’ பனிப்பாறை ஏரி

காணொளிக் குறிப்பு,
காணொளி: நேபாளத்தில் வேகமாக நிரம்பும் ’லேக் 2’ பனிப்பாறை ஏரி
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏற்கனவே ஒரு பனிப்பாறை ஏரி உடைந்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு ஏரி வேகமாக நிரம்பி வருவது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசுவா பகுதியில் இருக்கும் 'லேக் 2' பனிப்பாறை ஏரியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனத் தரவுகளின்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இந்த பனிப்பாறை ஏரியில் சுமார் 6,50,000 கன மீட்டர் நீர் சேர்ந்துள்ளதாக வெள்ள முன்னறிவிப்புப் பிரிவின் தலைவரும் மூத்த நீரியலாளருமான வினோத் பராஜூலி தெரிவித்துள்ளார்.

இந்த பனிப்பாறை ஏரி நிரம்பி வருவதாகவும், அதனால் இது உடையும் அபாயம் உள்ளதாகவும் அவர் பிபிசி நியூஸ் நேபாளியிடம் பேசுகையில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது என்ன? விரிவாக பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு