'மொட்டை அடித்தால் பணம் தருவதாக கூறிய சந்தேக நபர்' - சேலத்தில் என்ன நடந்தது?
ஆத்தூர் அருகேயுள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார்.
தன்னை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திய அவர், "கொரோனாவைப் போன்ற புதிய நோய் பரவி வருகிறது. தலைமுடி வழியாக அது பரவுவதால் மொட்டை அடித்தால் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். தமிழக அரசு அதற்காக ஊக்கத்தொகை வழங்குகிறது." என்று கூறியுள்ளார்.
அந்த நபர் ஊக்கத்தொகையாக பெண்களுக்கு ரூ.15,000, ஆண்களுக்கு ரூ.6,000, மாணவிகளுக்கு ரூ. 45,000 வழங்கப்படும் என்றும் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் பேச்சைக் கேட்டு மூன்று பெண்கள் மொட்டையடித்த நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



