காணொளி: குஜராத்தில் சாலையின் ஓரம் அந்தரத்தில் நிற்கும் கார் - காரணம் என்ன?
குஜராத்தின் சபர்கந்தா பகுதியில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக, காவல்துறையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இணைந்து ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளன.
சிலோடா மற்றும் ஷாம்லாஜிக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் செல்வதால் அடிக்கடி கடுமையான விபத்துகள் ஏற்படுகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியிலுள்ள ரசூல்புர் விபத்து அபாய மண்டலத்தில், விபத்துகளில் சேதமடைந்த வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களைப் பார்க்கும்போது ஓட்டுநர்கள் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெற்று, தங்கள் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவார்கள் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
அதிவேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், வாகனம் ஓட்டும்போது அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறையினர் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



