காணொளி: ஹோர்மூஸை திறக்க அமெரிக்காவுக்கு இரான் நிபந்தனை
காணொளி: ஹோர்மூஸை திறக்க அமெரிக்காவுக்கு இரான் நிபந்தனை
பிரசுரிக்கப்பட்டது
ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள், நேர்மறையாகவும் முன்னேறிய நிலையிலும் இருப்பதாக இரானும் ஓமனும் தெரிவித்துள்ளன.
இதனால், உலகின் முக்கியமான இந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், நீரிணையை மீண்டும் திறப்பதற்கு முன்பு அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய பல நிபந்தனைகளை இரான் தற்போது முன்வைத்துள்ளது.
ஜூன் 17-ஆம் தேதி இரான்-அமெரிக்கா இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தாண்டி, இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சில நிபந்தனைகளும், தற்போது ஹோர்மூஸ் நீரிணையை திறப்பதுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
இரானின் அந்த நிபந்தனைகள் என்ன இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



