காணொளி: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி மீட்பு
காணொளி: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
ஆற்றின் நடுவில் பாறையைப் பிடித்துக்கொண்டு வெளியேற முடியாமல் மூதாட்டி ஒருவர் தவித்த காணொளி இது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். ஆற்றின் நடுவில் உள்ள பாறையைப் பிடித்துக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்த மூதாட்டி குறித்த தகவல் தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மூதாட்டியை மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



