காணொளி: 2026 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ஏற்படுத்தும் மோசமான தாக்கங்கள்

காணொளிக் குறிப்பு, கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ஏற்படுத்தும் மோசமான தாக்கங்கள்
காணொளி: 2026 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ஏற்படுத்தும் மோசமான தாக்கங்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஆனால் இது வெறும் கால்பந்தைப் பற்றியது மட்டுமல்ல.

கோல்களுக்கு அப்பால், பணம், காலநிலை, அரசியல் மற்றும் அணுகல் போன்ற அம்சங்களும் இந்தப் போட்டியை வடிவமைத்து வருகின்றன.

மொத்தம் 48 அணிகள், 104 போட்டிகளில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகள் மூன்று நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடைபெறுகின்றன.

இதன் பொருள், அணிகளும் ரசிகர்களும் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இதன் விளைவு, முந்தைய உலகக் கோப்பைகளை விட இதில் கார்பன் வெளியேற்றம் மிக அதிகமாக இருக்கும்.

அடுத்ததாக வெப்பம். போட்டிகளை நடத்தும் சில நகரங்களில், குறிப்பாக பகல் நேரப் போட்டிகளின்போது, வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிக வெப்பம் நிலவும் சூழலில், நீண்ட நேர குளிர்விப்பு இடைவேளைகள் மற்றும் எந்த நேரத்தில் போட்டிகளை நிறுத்தி மீண்டும் திட்டமிட வேண்டும் என்பது குறித்த தெளிவான விதிமுறைகள் தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்களை அதிகம் பாதிப்பது செலவுதான்.

கத்தாரில் நடைபெற்ற முந்தைய உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, டிக்கெட் விலைகள் சில நேரங்களில் 10 மடங்கு வரை அதிகமாக உள்ளன.

இதனுடன் விமானக் கட்டணம், தங்கும் செலவு மற்றும் நகரங்களுக்கு இடையேயான — அல்லது நாடுகளுக்கு இடையேயான — பயணச் செலவுகளையும் சேர்த்தால், மொத்தச் செலவு ஆயிரக்கணக்கான டாலர்களை எட்டக்கூடும்.

இந்தத் தொடரில் உங்களுக்குப் பிடித்த அணியைப் பின்தொடர்வது செலவானது மட்டுமல்ல, அது சிக்கலானதும்கூட.

போட்டியை அணுகுவதற்கான வாய்ப்பு இத்தொடரின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது; குறிப்பாக அமெரிக்காவில், கடுமையான விசா விதிமுறைகள் யார் உள்ளே நுழையலாம் என்பதைத் தீர்மானிக்கின்றன.

இந்தப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட சோமாலிய நடுவர் ஒருவருக்கு, தடை விதிக்கப்பட்டது.

இது அதிகாரிகளை மட்டுமே பாதிப்பதில்லை. போட்டியில் பங்கேற்கும் பல நாடுகளின் ரசிகர்களும் விசா தடைகள் அல்லது அதிக நிராகரிப்பு விகிதங்களை எதிர்கொள்கின்றனர்.

உண்மையிலேயே உலகளாவியதாக இருக்க வேண்டிய ஒரு போட்டிக்கு இது ஒரு கேள்வியை எழுப்புகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு