காணொளி: ஜிம் செல்ல 40 கி.மீ. பயணிக்கும் நபர்

காணொளி: ஜிம் செல்ல 40 கி.மீ. பயணிக்கும் நபர்

பிரேசிலில் ஒரு நபர் ஜிம் செல்ல 40 கி.மீ. தூரம் படகு மற்றும் பேருந்தில் பயணம் செய்து வருகிறார். அவரின் வீடியோக்கள் தற்போது வைரலாகியுள்ளன. ஆவா பின்யோ எனும் நபர் வாரத்திற்கு நான்கு முறை இவ்வாறு ஜிம் செல்கிறார்.

முதலில் அவர் வீட்டில் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டார். பின்னர் பெரிய ஜிம்மில் பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். ஆனால் அவர் அமேஸான் நதிக்கரையில் வாழ்வதால், அங்கு செல்வது எளிதல்ல.

30 நிமிடம் படகில் செல்லும் அவர் பின் 10 நிமிடம் நடந்து பேருந்து நிறுத்தத்திற்கு செல்கிறார். இதன்பின் மேலும் 1 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து ஜிம்முக்கு செல்கிறார். இவரின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு ஒரு ஆண்டு இலவச பயிற்சி அறிவிக்கப்பட்டது.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு