தென் கொரியாவில் நடந்த தூக்கப்போட்டி - வெற்றி யாருக்கு?

தென் கொரியாவில் நடந்த தூக்கப்போட்டி - வெற்றி யாருக்கு?

தென் கொரியாவின் சியோல் நகரில் ‘பவர் நேப் காண்டெஸ்ட்’ எனப்படும் தூக்கப்போட்டி நடைபெற்றது. சியோல் பெருநகர அரசு மூன்றாவது ஆண்டு வசந்தகால நிகழ்வாக இந்தப் போட்டியை நடத்துகிறது.

பங்கேற்பாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், தூங்கும் அழகி அல்லது இளவரசரைப் போன்ற உடைகளை அணிந்து வர வேண்டும்; சோர்வாகவும் வயிறு நிறைந்த நிலையிலும் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், அவர்களின் இதயத்துடிப்பு நிலையாக உள்ளதா என்பதை அதிகாரிகள் அளவிட்டனர்.

இது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் 80 களில் உள்ள ஒருவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 37 வயதான ஒருவர் இரண்டாம் இடம் பெற்றார். இந்த தூக்கப் போட்டி தென் கொரியர்களிடம் நீடித்து வரும் ஒரு பிரச்னையை வெளிப்படுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு