பாம்பின் கழுத்தில் சிக்கியிருந்த இரும்பு வளையம் அகற்றப்பட்டது எப்படி?
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள வாகன பழுது பார்க்கும் கடைக்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. அதன் கழுத்தில் இரும்பு வளையம் ஒன்று சிக்கிக் கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் பாம்பு பிடிக்கும் குழுவினரை தொடர்புகொண்டு பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பிறகு அந்த வளையம் அகற்றப்பட்டது. பாம்பின் கழுத்தில் சிக்கியிருந்த வளையம் பைக்கின் ஹேண்டில் பகுதியை சேர்ந்த ஒரு பாகம் எனவும் இந்த பாம்பு இந்திய கோப்ரா வகையை சேர்ந்தது எனவும் பாம்பு பிடி வீரர் கூறினார்.
"இந்தப் பாம்பு இந்திய ஸ்பெக்டாக்கிள்ட் கோப்ரா (இந்திய வகையை சேர்ந்தது நாகம்) ஆகும், இது ஒரு பெண் பாம்பு. அது இந்த மெக்கானிக் கடைக்குற் நுழைந்துவிட்டது, அதன் கழுத்தில் பைக்கின் ஒரு பாகம், வளையம் போன்ற பொருள் சிக்கிக் கொண்டது. அதை வெளியே எடுக்கும் போது நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். எண்ணெய் போன்றவற்றை ஊற்றி எப்படியோ அதன் வளையத்தை வெளியே எடுத்தோம். பிறகு, அதை மீண்டும் அதன் வசிப்பிடப் பகுதியில் விடுவித்தோம்." என்றார் அவர்.
விரிவாகக் காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



