காணொளி: கடலுக்குள் மூழ்கிய 4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு

காணொளிக் குறிப்பு, கடலுக்குள் மூழ்கிய 4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு
காணொளி: கடலுக்குள் மூழ்கிய 4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கப்பட்டது

துருக்கி கரை அருகே கடலுக்குள் விபத்துக்குள்ளான உலகின் மிகவும் பழமையான கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துருக்கியின் அன்டால்யாவில் உள்ள கெகோவா தீவின் கடற்கரைக்கு அருகில் இவை உள்ளன. அந்தக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கடலுக்கு அடியில் ஒரு சரிவுப் பகுதியில், அலைகளுக்குக் கீழே வெறும் 30 மீட்டர் ஆழத்தில் சிதறிக்கிடக்கின்றன.

மூன்று பெரிய கல் நங்கூரங்களும், 'ஆம்ஃபோரே' (amphorae) என்று அழைக்கப்படும் 30-க்கும் மேற்பட்ட பீங்கான் சேமிப்பு பானைகள் கண்டெடுக்கப்பட்டன.

இவை சுமார் 4,400 முதல் 4,700 ஆண்டுகள் வரை பழமையானவை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பல் சுமார் 10 மீட்டர் நீளம் கொண்டதாகவும், மத்திய தரைக்கடல் வழியாக சரக்குகளை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பலாக இருந்ததாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கடலுக்கடியில் இருந்து அந்தப் பானைகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்தனர். பல்லாயிரம் ஆண்டுகள் நீருக்கடியில் இருந்த அந்தப் பானைகள், தற்போது மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பானையில் என்ன கொண்டு செல்லப்பட்டன என்பதைக் கண்டறியும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு