மால்டா பட்டாசு தொழிற்சாலையில் மிகப்பெரிய வெடிப்பு
மால்டா பட்டாசு தொழிற்சாலையில் மிகப்பெரிய வெடிப்பு
பிரசுரிக்கப்பட்டது
மால்டாவில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் திங்கள் கிழமை மிகப் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது.
நக்ஸார் பகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த இரண்டு நபர்கள் சிறிய அளவில் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மால்டா போலீசார் தெரிவித்தனர்.
வெடிப்பின் போது தொழிற்சாலையில் பணியாற்ற அனுமதி பெற்ற எந்த தொழிலாளரும் அங்கு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



