காணொளி: 70 குழந்தைகளுக்குத் தந்தை, 58 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர் - குடும்பத்தின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, 58 குழந்தைகளுடன் தடுமாறும் ஆப்கன் குடும்பம்
காணொளி: 70 குழந்தைகளுக்குத் தந்தை, 58 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர் - குடும்பத்தின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது சாதெக் 70 குழந்தைகளைப் பெற்றுள்ளார், அதில் 58 குழந்தைகள் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர்.

அவர் தொடர்ந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டு வருகிறார். அவரது இளம் குழந்தைக்கு 3 மாதங்கள் ஆகின்றது. அவரது குடும்பம் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் நான்கில் மூன்று பேர் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிவதில்லை என ஐ.நா கூறுகிறது. நாட்டில் சிறுவயது திருமணங்களும் பரவலாக நடக்கின்றன.

20-இல் இருந்து 24 வயதுக்கு உள்பட்ட 40 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் 18 வயது ஆவதற்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.

தனது குடும்பத்தை ஏன் தொடர்ந்து வளர்த்து வருகிறார் என்பதை முகமது விளக்கவில்லை. தன் பிள்ளைகள் விஷயத்தில் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதை அவர் ஒப்புக்கொள்கிறார். அவரின் கதை என்ன? இந்தக் குடும்பத்தின் நிலை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு