காணொளி: கலவரத்தின்போது நகைக் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்
காணொளி: கலவரத்தின்போது நகைக் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்
பிரசுரிக்கப்பட்டது
மாணவர்கள் தலைமையில் பல வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள், பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களாகத் தீவிரமடைந்துள்ளன.
அக்டோபர் 17ஆம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளில், கொள்ளையர்கள் கௌமால் நகைக்கடையின் கண்ணாடிகளை உடைத்துவிட்டு, உள்ளே பொருட்களைத் தேடுவதும், காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களைச் சேதப்படுத்துவதும், பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.
வார இறுதியில் நாடு முழுவதும் ஏறக்குறைய 3,000 கடைகள் பாதிக்கப்பட்டதாக வர்த்தகம் மற்றும் சில்லறை விற்பனை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



