காணொளி: 'பலமான அரசுக்கு எதிராக வலுவான போராட்டம்’ - சர்வதேச ஊடகங்களின் பார்வையில் சிஜேபி போராட்டம்
காணொளி: 'பலமான அரசுக்கு எதிராக வலுவான போராட்டம்’ - சர்வதேச ஊடகங்களின் பார்வையில் சிஜேபி போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
நீண்ட நாட்களுக்கு பிறகு, நரேந்திர மோதி அரசுக்கு எதிராக இளைஞர்களின் கோபம் திங்களன்று தெருக்களில் வெளிப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தெருக்களில் இறங்கி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், பலர் காயமடைந்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைமை தாங்கியது. அதேசமயம், அரசின் கொள்கைகளால் அதிருப்தியடைந்த பலரும் இதில் பங்கேற்றனர். நேற்றைய தினம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தியதும் கவனம் பெற்றுள்ளது.
திங்களன்று நடைபெற்ற போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரவலாகச் செய்தி வெளியானது. இது பற்றி அவை கூறி இருப்பது என்ன?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



