காணொளி: "சித்தரிக்கப்பட்ட எதிர்ப்பு" - சத்தியபாமா சொல்வது என்ன?
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர் சத்தியபாமா.
இவர் இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார். பரப்புரைக்காக இவர் செல்லும் ஒரு சில இடங்களில் அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், புதன்கிழமை பெரியகுமாரபாளையம் ஊராட்சியில் அவர் பரப்புரை செய்தபோது பொதுமக்கள் அவரை இடைமறித்து கேள்வி எழுப்பினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் பெல்லம்பட்டி பகுதியில் சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அருண் குமாரிடம் “வாக்கு கேட்டு வராதீர்கள்” எனக் கூறி சிலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.
மறுபுறம் இந்த எதிர்ப்புகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என சத்தியபாமா கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



